Skip to main content

வெளிமாநிலத்தில் இருந்து வந்த இளைஞர்கள்... அரசுப் பள்ளியில் தங்க வைக்க மக்கள் எதிர்ப்பு... மக்களைச் சமாதானப்படுத்திய அதிகாரிகள்!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

maharashtra tamil peoples had come out native tamilnadu officers peoples


உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தொற்று பரவாமல் தடுக்க இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப விரும்பினால் முறையான அரசு அனுமதியுடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.


அந்த அடிப்படையில் திருச்சியைச் சேர்ந்த 2 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 18 பேர், சிவகங்கையைச் சேர்ந்த 21 பேர் என 41 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்து வந்துள்ள நிலையில், ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊர்களுக்குப் புறப்பட முடிவு செய்து சேலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஒரு பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர்.

இதில் திருச்சியில் 2 பேர் இறங்கினர். பிறகு இலுப்பூரில் சிலர் இறங்குவதற்காக பஸ் நிறுத்தப்பட்ட போது, அங்குச் சோதனையில் இருந்த அதிகாரிகள் அவர்களைப் பரிசோதனை செய்துள்ளனர். அதில் 5 பேருக்கு உடல் வெப்பநிலை அதிகமாக இருந்ததால், அவர்களை வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்காமல் இலுப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

 

 


இந்தத் தகவலை அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களை இலுப்பூரில் தங்க வைக்க எதிர்ப்புத் தெரிவித்ததுடன், புதுக்கோட்டையில் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ராணியார் மருத்துவமனை, பழைய மாவட்ட மருத்துவமனைகளில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் வலியுறுத்தியதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தும் போது, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேரில் 3 பேர் மட்டுமே இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் நோய்த் தொற்று ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனாலும் வெளிமாநிலத்தில் இருந்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக அவர்களைச் சில நாட்கள் மட்டும் தங்க வைத்து பரிசோதனைகள் செய்து அவர்களை வீட்டிற்கு அனுப்ப இருக்கிறோம் என்று சமாதானம் பேசினார்கள். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 18 பேரும் இலுப்பூர் அரசு மகளிர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

பிறப்பு விகிதத்தில் திரெளபதி குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Ajitpawar Talk about Draupathi in birth rate

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே அணியின் சிவசேனா கட்சி, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ளன. அதே போல், மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் பகுதியில் மருத்துவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு அஜித் பவார் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் உள்ள சில மாவட்டங்களில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 850 பெண் குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. மேலும், சில இடங்களில் 790 பெண்கள் என்ற அளவிலும் உள்ளன. இது மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம். இனி வரும் நாட்களில், ‘திரௌபதி’ பற்றி யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. இதை நகைச்சுவையை பார்க்காதீர்கள். இல்லையேல் நாளை திரௌபதியை அவமதித்ததாக நான் விமர்சிக்கப்படுவேன்” என்று கூறினார்.

இந்து மத புராணக்கதையான மகாபாரத்தில் திரெளபதிக்கு, அர்ஜுன் உள்ளிட்ட 5 சகோதரர்கள் கணவர்களாக இருப்பதாக கதையில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆண் குழந்தைகளுக்கு சம அளவில் பெண் குழந்தைகள் இல்லாததை திரெளபதியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேந்த ஜிதேந்திர அவாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜிதேந்திர அவாத் கூறியதாவது, “மனதில் விஷம் இருந்தால், அவர் வாயிலிருந்து வேறு என்ன வெளிவரும்? திருமணங்கள் நடக்காது, கேள்விகள் எழும், பிரச்சனைகள் வரும் என்று இன்னொரு உதாரணம் சொல்லியிருக்கலாம். மகாராஷ்டிராவில், பிறப்பு விகித வேறுபாடு எப்போதும் நிலையாக இருந்ததில்லை. திடீரென்று, அவர் மனதிற்கு திரெளபதி தோன்றியுள்ளது.  ஒவ்வொரு முறையும் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால், அதற்குண்டான விலையை  சரத் பவார் கொடுக்க வேண்டியிருந்தது” என்று கூறினார்.