/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2064.jpg)
'2021 உள்ளாட்சியில் நல்ல தேர்வு - நீங்கள்தான் தமிழகத்தின் இறுதி தீர்வு' என்ற வாசகத்துடன் நடிகர் விஜய்யை முதல்வராகச் சித்தரித்து மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், இதுவரை அரசியலில் களம் காணாத நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. இந்த வெற்றியைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் உள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நடிகர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பது போலச் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்தப் போஸ்டரில், '2031ல் ஜோசப் விஜய் எனும் நான் உண்மையான நம்பிக்கையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என உறுதி கூறுகிறேன்' எனப் பிரமாணம் எடுக்கும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், ‘2021 உள்ளாட்சியில் நல்ல தேர்வு - நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தீர்வு’ என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இப்போஸ்டர்கள் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)