மதுரை மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட 13 பேர் விடுதலை செய்யப்பட்டதன் ஆவணங்களை சமர்ப்பிக்க சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

கடந்த 1996 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தினை சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து முருகேசன் உட்பட ஏழு பேரை, 1997-ல் ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

Advertisment

madurai

இந்நிலையில் ஏற்கனவே, அண்ணா பிறந்தநாளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேரை விடுதலை செய்துள்ளனர்.

13 பேரின் விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினவேல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே 7 பேர் கொள்ளப்பட்டுள்ள வழக்கில் 13 பேரின் விடுதலையின் அரசாணையின் நகல் வழங்க உத்தரவிட வேண்டும் என மனு செய்துள்ளார்.

Advertisment

madurai

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது உச்சநீதிமன்றம் விதித்த ஒரு தண்டனை காலத்தை, தமிழக அரசு எளிதாக கையாண்டு குற்றவாளிகளை விடுவித்து இருப்பது கண்டனத்துக்குரியது. மேலும் 13 பேரின் விடுதலை செய்யப்படதன் அரசாணையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள்இதேபோல் தர்மபுரியில் பேருந்து எரித்து மூன்று மாணவிகள் இறந்த வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் மதுரை மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட 13 பேர் விடுதலை செய்யப்பட்டதன் ஆவணங்களை சமர்ப்பித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை நாளை நவம்பர் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்து வைத்தனர்.