madurai district bus and car incident police investigation

மதுரையில் தனது காரை உரசி சென்ற அரசுப் பேருந்தைத் துரத்திச் சென்ற மருத்துவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த மற்றொரு அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் மருத்துவர் உயிரிழந்த நிலையில், பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Advertisment

மதுரையில் உள்ள ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராகப் பணியாற்றி வருபவர் கார்த்திகேயன். விடுமுறையையொட்டி, சொந்த ஊரான திருநெல்வேலிக்கு காரில் சென்ற அவர், மதுரை திரும்பிக் கொண்டிருந்தார்.

Advertisment

பரம்புப்பட்டி அருகே வந்தபோது, அரசுப் பேருந்து ஒன்று கார்த்திகேயனின் காரில் பக்கவாட்டில் உரசிவிட்டு, நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர், அந்த பேருந்தை நிறுத்துவதற்காக தனது காரை அதிவேகத்துடன் இயக்கியுள்ளார் கார்த்திகேயன். பரம்புப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே பேருந்தை முந்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்தபோது, சாலையின் மையத் தடுப்பில் மோதி ஏறிச் சென்று எதிர்திசையில் சிவகாசி வந்த மற்றொரு அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

madurai district bus and car incident police investigation

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று மருத்துவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தின் காட்சிகள் பெட்ரோல் விற்பனை நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.