144 தடை உத்தரவு தற்போது அமலில் உள்ள நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கூடிய பெரும் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதுரை மாநகர காவல்துறை, மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் வைரஸ் தொற்றின் வேகம் தீவிரமாக இருக்கின்ற காரணத்தால் மாநகர காவல் துறை, இன்றிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே வருகின்ற அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்து கடுமையான அபராதம் விதிக்கவும் முடிவு செய்திருந்தது.
அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்கின்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன கியூ ஆர் கோடு உள்ள அடையாள அட்டைகளை பெற வேண்டும் என்று மதுரை மாநகர காவல் அறிவித்திருந்தது. அந்த அட்டையை பெறுவதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்ததால், இன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது.
செய்வதறியாது திகைத்த அதிகாரிகள், யாருக்கும் அடையாள அட்டை வழங்க முடியாமல் தவித்தனர். இதற்கிடையே க்யூ ஆர் கோடு அடையாள அட்டை முறை தவிர்க்கப்பட்டு பழைய நடைமுறையே தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனை அடுத்து கூடி இருந்த கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.
இப்புதிய நடைமுறை காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடிய பெரும் கூட்டத்தால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/m21.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/m22.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/m23.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/m25.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/m26.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/m24.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_291.gif)