Skip to main content

கனியாமூர் பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 03/01/2023 | Edited on 03/01/2023

 

Madras High Court Question to Kaniyamoor School Management

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 மாணவி மர்ம மரணம் தொடர்பாக அங்கு நடைபெற்ற கலவரத்தில் பேருந்துகள், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன.

 

மாணவர்களின் நலன் கருதி பள்ளியை நிர்வகிக்கும் லதா அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், ஒரு மாதம் 9 முதல் 12 வகுப்பு வரை நேரடி வகுப்புகள் சோதனை முறையில் நடத்த அனுமதி அளித்தது.

 

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பள்ளியில் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. அதனால் மற்ற வகுப்புகளையும் செயல்பட அனுமதிக்கக் கோரி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், பள்ளி திரும்பும் மாணவர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த பள்ளி நிர்வாகம் சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

சிறுத்தை நடமாட்டம்; தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Leopard movement; Holiday announcement for private school

சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் நேற்று (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் கோவையில் இருந்து தனிப்படை ஒன்று விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் செம்மங்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று (03.04.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.