MaanaaduFrom25thNovember

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில் இன்று மாலை தயாரிப்பாளர் தவிர்க்க இயலாத காரணத்தால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது; தேதி பின்னர் அறிவிக்கிறேன் சிரமங்களுக்கு வருந்துகிறேன் என ட்வீட் செய்திருந்தார்.

Advertisment

நாளை ரிலீஸாகஇருந்த நிலையில் மாநாடு வெளியாகாது என்றதகவல் தமிழகம் முழுவதும் உள்ள சிம்புரசிகர்களைசமூகவலைத்தளங்களில் வருத்தத்தினை பதிவு செய்யவைத்தது. இந்நிலையில்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்ற தகவலோடு உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்றுஇயக்குநர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தகவல் அறிந்ததும் நாளை திரையில் சிம்புவின் மாநாடு காண அவரது ரசிகர்கள்உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

Advertisment