Skip to main content

'பொய் பேசுவது பிரேமலதாவிற்குக் கைவந்த கலை' - மாணிக்கம் தாகூர் கண்டனம்

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
'Lying is an art acquired by Premalata' - Manikam Tagore condemned

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் கூட்டணியில் இருந்த தேமுதிகவும் வெற்றி பெறாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் விருதுநகரில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் கடைசி வரை டஃப் கொடுத்து சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இறுதியில் தோல்வியைத் தழுவினார்.

இன்று சென்னையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,''விஜய பிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் கடைசியில் ஓட்டு எண்ணிக்கையை நிப்பாட்டி அங்கு பிரஷராக இருக்கிறது எனச் செல்போனை ஆஃப் செய்து 10 முறை வெளியே சென்று கலெக்டரிடம் பேசியது என அங்கு நடந்தது எல்லாமே உள்ளங்கையில் நெல்லிக்கனியாக எல்லாருக்கும் தெரிந்தது.

விருதுநகரில் மதியம் மூன்று மணியிலிருந்து 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது ஏன்? 13-வது சுற்று எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. நள்ளிரவில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. நீதிமன்றத்திற்குச் சென்றால் உண்மையாக உடனடியாக அதற்கு தீர்வு வருமா என்பதை உங்களிடமே கேட்கிறேன். விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார். தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக விருதுநகர் தேர்தல் அலுவலர் கூறினார். 45 நாட்கள் வரைக்கும் மறுவாக்கு எண்ணிக்கை கேட்க உரிமை இருக்கிறது. அதனால் நாங்கள் கேட்கிறோம். இதில் தேர்தல்  ஆணையம் நீதி தர வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

'Lying is an art acquired by Premalata' - Manikam Tagore condemned

இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இதுகுறித்து குறிப்பிடுகையில், ''விஜயபிரபாகரன் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது அங்குதான் இருந்தார். அப்படி இருக்கும் பொழுது இப்படி பேச்சுக்களை பேசி தேவையில்லாமல் ஒரு தவறான செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல நினைக்கும் பிரேமலதாவின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. வாக்கு எண்ணிக்கையின் போது எல்லோரும் இருந்தார்கள். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருந்தார். 

இப்படி இருக்கும் நிலையில் மக்கள் அளித்த தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் மக்களை குழப்புவதும் பொய் பேசுவதும் பிரேமலதாவிற்கு கைவந்த கலை. விஜயகாந்தின் அரசியலையும் முடித்து வைத்தவர் இவர்தான். இப்படிப்பட்ட தவறான பொய்யை பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. என்னைப் பொறுத்த மட்டில் தேர்தல் அதிகாரிகள் மிகக் கடுமையாக உழைத்து நேர்மையான வாக்கு எண்ணிக்கையை நள்ளிரவு ஒரு மணிவரை நடத்தி முடித்தார்கள். அப்படிப்பட்டவர்களை சென்னையில் அமர்ந்து கொண்டு இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பார்கள்'' என தெரிவித்துள்ளார்.

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகள் பெற்ற நிலையில் தோல்வியைத் தழுவினார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 4,379 என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்