Love couple takes refuge in police station due to opposition from parents

பெற்றோர்களின் எதிர்ப்பால் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பி.பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த வேலுமணி மகன் தினேஷ்குமார்(26) ஊதுபத்தி கம்பெனியில் மெக்கானிக்காக பணியாற்றுகிறார். ஆம்பூர் அடுத்த சானாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் மகள் ஜீவிதா(21) கத்தாரி பகுதியில் தனது தாத்தா வீட்டில் தங்கி ஊதுபத்தி கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

Advertisment

கடந்த ஆறு மாதங்களாக தினேஷ்குமார் மற்றும் ஜீவிதா காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வீட்டில் பெற்றோர்களிடம் காதலித்து வருவதாகத்தெரிவித்த நிலையில், பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகத்தெரிகிறது.

இந்நிலையில், காதலர்கள் இருவரும் தங்களுடைய காதலை மறக்க முடியாமல் பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி, வீட்டை விட்டு வெளியேறி ஆந்திரா பகுதிக்குச் சென்றுதிருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாட்றம்பள்ளி காவல்துறை, காதலர்களின் பெற்றோர்களை அழைத்து இருவரும் மேஜர் என்பதால் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

Advertisment