Local elections for 9 districts - Voter list released!

Advertisment

இன்று சென்னை அடையாறில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, "புதிதாக ஆறு மாநகராட்சிகள், 30க்கும் மேற்பட்ட நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக வார்டுகள் மறுவரையறை செய்ய வேண்டியுள்ளது. மறுவரையறைக்காக 100 நாட்கள் அவகாசம் தர வேண்டியுள்ளது. பொதுமக்களின் குறைகளைக் கலைந்திட மேலும் 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த உறுதியாக உள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு முயன்றுவருகிறது. ஓரிரு மாதங்கள் கூடலாம் அல்லது குறையலாம்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் புதியதாகஅறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. www.tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடக்கவிருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் பெயர், வார்டு உள்ளிட்ட விவரங்களை அந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது.