Skip to main content

வாக்கு எண்ணிக்கை...பத்திரிகையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் வாக்குவாதம்...!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, புறநகர் நாசரேத் மார்காஷியஸ் பள்ளி, சாயர்புரம், வாகைக்குளம் உள்ளிட்ட 12 மையங்களில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

 

LOCAL BODY ELECTION RESULT- JOURNALIST AND GOVERMENT EMPLOYEES ARGUMENTS

 



இதற்கான பணியில் 2875 அரசுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை உள்ளாட்சிகளின் நான்கு பதவிக்கான வாக்குச்சீட்டுகள் தரம் பிரிக்கப்பட்டு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.

மாவட்டத்தின் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய வாக்கு பதிவு மையத்தில் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆனால் முதல் சுற்று முடிவுகளை கூட அறிவிக்காமல் பத்திரிகையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பத்திரிக்கையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படாததால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளியே வேட்பாளர்கள் மற்றும் முகவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

100 நாள் வேலை; பெண்களை மிரட்டும் அதிகாரிகள்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Officials threaten women with 100-day work

 

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டம் என்றழைக்கப்படும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. தற்போது, இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.

 

இத்தகைய சூழலில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட எல்லையில் அமைந்துள்ளது வேளஞ்சேரி ஊராட்சி. வேளஞ்சேரி ஊராட்சியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தில் இருக்கும் மிகப்பெரிய ஏரியில் நான்கு ஐந்து அடி ஆழத்தில் தண்ணீருக்குள் நடந்து சென்று ஆபத்தான பகுதியில் வேலை செய்ய வைப்பதாகப் பணி செய்யும் பெண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர். மேலும் இப்படி ஆபத்தான முறையில் தண்ணீருக்குள் இறங்கிச் சென்று வேலை செய்யும்பொழுது சில நேரத்தில் பாம்புகள் கூட கடிப்பதாகக் கூறுகின்றனர்.  அதுமட்டுமின்றி, எங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து உயிர் போகும் நிலை ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது எனப் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். 

 

அதே நேரம் இந்த பகுதியைச் சேர்ந்த வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள், தங்களுக்கு ஏரியைக் கடந்து தான் பணிகளை ஒதுக்குவதாகவும் தங்களை அங்குதான் வேலை செய்ய வேண்டும் எனக் கூறுவதாகப் பகிரங்கமான குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இங்கு நடக்கும் அவலங்கள் குறித்து டிவியிலோ மீடியாக்களிலோ பேட்டி கொடுத்தால் உங்களை அடுத்த நாளே 100 நாள் வேலையில் இருந்து துரத்தி விடுவோம் என்று அதிகாரிகள் மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்து வெளியே கூறாமல் இந்த அவலத்திலேயே வாழ்ந்து வந்துள்ளனர். 

 

Officials threaten women with 100-day work

 

ஒருகட்டத்தில் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள், இந்த சம்பவம் குறித்துப் பேச ஆரம்பித்துள்ளனர். இப்படி பெண்களை அடிமை போல் திருத்தணி வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆபத்தான முறையில் பணி செய்ய வைக்க வேண்டுமா? வேறு எங்கும் பணிகள் இவர்களுக்கு ஒதுக்க முடியாதா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக 100 நாள் பணிகளில் ஏற்படும் முறைகேடுகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் நடக்கும் அசம்பாவித பணிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 27 பஞ்சாயத்து பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது, 100 நாள் வேலைத் திட்டத்தில் நடக்கும் அவலங்கள் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

“சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பும் எவருக்கும் நாங்கள் ஒத்துழைப்பு தர மாட்டோம்” - காங்கிரஸ் திட்டவட்டம்

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

Congress says We will not cooperate with anyone who spreads hatred in the society

 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. ‘இந்தியா’ (INDIA) எனப் பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்களூரூ, மும்பை என மாநிலத்தின் அடுத்தடுத்த இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகிறது. இந்தியா கூட்டணியின் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முடிவடைந்த நிலையில், அதன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் நடைபெற்றது. கே.சி. வேணுகோபால், டி.ஆர். பாலு உட்பட 14 பேர் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

 

இந்த கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தை மத்தியப் பிரதேசத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது. அதில், இந்தியா கூட்டணி சில தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் நிகழ்ச்சியைப் புறக்கணிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. எந்தெந்த தொகுப்பாளர்களின் நிகழ்ச்சி என்று 14 பேர் கொண்ட விவரத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து, காங்கிரஸ் தங்களது செய்தி தொடர்பாளர்களைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுப்பாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மீடியா சேனல்கள் மற்றும் எடிட்டர்கள் காங்கிரஸ் பிரதிநிதியாக யாரையும் அழைக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரன்தீப் சுர்ஜேவாலா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

 

இந்த நிலையில், செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கம், இந்தியா கூட்டணி எடுத்த முடிவால் வேதனையும், கவலை அளிப்பதாகவும் தெரிவித்தது. மேலும், சில ஊடகவியலாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்களை புறக்கணிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிக் கூட்டணியை வலியுறுத்துகிறது என்று தெரிவித்தது. அதேபோல், பா.ஜ.க தரப்பில் இந்தியா கூட்டணி எடுத்த முடிவுக்கு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தது. இது குறித்து பா.ஜ.க சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா கூட்டணி சில ஊடகவியலாளர்களைப் புறக்கணிப்பது மற்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. இத்தகைய முடிவுகளை எடுத்ததன் மூலம் தனது அடக்குமுறை, சர்வாதிகார மற்றும் எதிர்மறையான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. கருத்து சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் இத்தகைய இழிவான மனநிலையை பா.ஜ.க கடுமையாக எதிர்க்கிறது” என்று தெரிவித்தது.

 

இந்த நிலையில், தெலங்கானாவின் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள ஹைதராபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, காரிய கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பவன் கேரா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் சில தொகுப்பாளர்களின் நிகழ்ச்சி புறக்கணிப்பு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “ நாங்கள் யாரையும் தடை செய்யவோ புறக்கணிக்கவோ இல்லை. இது ஒத்துழையாமை இயக்கம். அதனால் சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பும் எவருக்கும் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம். அவர்கள் எங்களுக்கு எதிரி இல்லை. எதுவும் நிரந்தரம் இல்லை. அதனால், அவர்கள் செய்வது இந்தியாவுக்கு நல்லதல்ல என்பதை நாளை ஒருவேளை அவர்கள் உணர்ந்தால், நாங்கள் மீண்டும் அவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்குவோம்” என்று கூறினார்.