
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 25ஆம் தேதி, ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் சங்கமான ஏ.ஐ.டி.யு.சி. அதன் மாவட்டத் தலைவர் பொன்னுசாமி தலைமையில், கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், "நசிந்துவரும் தொழிலான கைத்தறிகளைக் காப்பாற்ற வேண்டும். கைத்தறி தொழிலாளர்களுக்கு ஒய்வூதியமாக மாதம் ஐயாயிரம் வழங்க வேண்டும். கைத்தறியாளர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் கரோனா கால நிவாரண உதவித் தொகை என அரசே அறிவித்த அந்த இரண்டாயிரம் ரூபாயை எல்லோருக்கும் தரவேண்டும். பெருமுதலாளிகள் லாபத்திற்காக ஏற்றப்படும் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசைக் கண்டித்துக் கோஷங்கள் எழுப்பினார்கள்.