Let us commit to lead a prosperous India for all  Chief Minister M.K.Stalin

Advertisment

அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சி நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலை நாளில் உறுதியேற்போம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டைக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். அதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை 3வது முறையாக ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து பல்வேறு விருதுகளைத்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பதிவில், “மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலையுயர்வு என ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும், வேற்றுமைகளை மதிக்கும் பண்பும், அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலை நாளில் உறுதியேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.