Skip to main content

சட்டமன்றம் சென்னையிலும், மக்கள் மன்றம் மேலூரிலும் கூடியது -அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

Published on 16/03/2018 | Edited on 16/03/2018
Rathinasabapathy


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி. பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்த இவர், தினகரன் புதிய அமைப்பு தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அதே போல் கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.
 

இதுகுறித்து ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
 

நேற்றைய தினம் சட்டமன்றம் சென்னையிலும், மக்கள் மன்றம் மதுரை மாவட்டம் மேலூரிலும் கூடியது. இவை எல்லாமே ஒன்றுதான். மக்களின் எண்ணங்கள் சட்டமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டும்.
 

மக்கள் அனைவராலும் ஒரே மன நிலையுடன் ஏற்றுக்கொண்ட தலைவர் டி.டி.வி.தினகரன் மட்டுமே. தமிழகத்தில் அவரை மட்டுமே பலதரப்பட்ட மக்களும் பெரும்பான்மையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''எடப்பாடி போல நாங்க இல்ல... பாஜகவுடன் உண்மையான கூட்டணி...'' -அறந்தாங்கி ரத்தினசபாபதி பேட்டி!

Published on 31/07/2022 | Edited on 31/07/2022

 

admk

 

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவின் தலைமை நாங்கள் தான் என்று சசிகலா, எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடியும் ஒபிஎஸ்ஸும் ஒருவரையொருவர் நீக்குதும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதும் அன்றாட நிகழ்வாக உள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தை தெற்கு வடக்காக பிரித்து தெற்கு மா.செ.வாக வைரமுத்துவும், வடக்கு மா.செ.வாக மாஜி விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏவும் உள்ள நிலையில் ஓபிஎஸ் அணியில் புதிய மா.செக்களாக தெற்கு மாஜி அறந்தாங்கி ரத்தினசபாபதி, வடக்கு மா.செ.வாக ராஜசேகரன், கிழக்கு மா.செ.வாக ஞான.கலைச்செல்வன் ஆகியோரை  நியமித்துள்ளனர்.

 

ஓபிஎஸ்ஸால் நியமிக்கப்பட்ட புதிய மா.செக்கள் சனிக்கிழமை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம், அறந்தாங்கி உட்பட பல முக்கிய நகரங்களுக்குச் சென்று கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார்கள். தொடர்ந்து அறந்தாங்கியில் பேட்டியளித்த ரத்தினசபாபதி, ''எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு நிரந்தர ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்தான் உள்ளார். தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டது. பிரதமர் மோடி சென்னை வந்தார். நல்ல திட்டத்திற்காக வந்தார். நாங்கள் அவருக்கு உண்மையான தோழமை கட்சியாக இருந்து கொண்டிருக்கிறோம்.

 

திருமணம் செய்து கொள்வது ஒருவர் இன்னொருவருடன் வாழ நினைப்பது என எடப்பாடியார் போல இல்லாமல் பாஜகவுடன் உண்மையான கூட்டணியாக இருக்கிறோம். கூட்டணி விசுவாசம், தர்மத்தை கடைப்பிடிக்கிறோம். ஆனால் அவர்கள் (எடப்பாடி) வேறு ஒருவருடன் மறைமுக கூட்டணி வைப்பதற்காக கட்சியை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்'' என்றார்.

 

தொடர்ந்து பேசிய வடக்கு மா.செ ராஜசேகரன், ''தேர்தல் ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ்க்கு அழைப்பு கொடுத்துள்ளது. அந்த அழைப்பை ஏற்று கோவை செல்வராஜ் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் கொடுத்துள்ளார். இதை யாராலும் மறைக்க முடியாது'' என்றார்.

 

Next Story

முதல்வரை பார்க்க ஒரு மணிநேரம் காத்திருந்தும் அனுமதி மறுப்பு ஏன்?-அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி கேள்வி

Published on 22/10/2020 | Edited on 22/10/2020
Why wait an hour to see the CM one and then be denied permission? Aranthangi MLA Rathinasapathy Question

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புதுக்கோட்டையில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். இந்நிலையில் புதுக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்காக சென்ற அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

இன்று ஆய்வுக்காக வந்த முதல்வரை சந்திக்க சென்ற போது அதிகாரிகள் தடுத்ததாக தெரிவித்துள்ள அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி,  அதேபோல் ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்திற்கு சென்ற பொழுது இரண்டாவது முறையாக மாலையும் அவரை சந்திக்க முயன்ற பொழுதும் தான் வெளியே ஒரு மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மக்கள் பிரச்சினை பற்றி பேச சந்திக்க விரும்பவில்லை. எங்கள் மாவட்டத்திற்கு விருந்தினராக வந்த முதல்வரை வரவேற்று வழியனுப்பி வைப்பதற்காகவே அவரை சந்திக்க முயன்று காத்திருந்தேன் அதற்கும் கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார். அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி அமமுக விலிருந்து பிரிந்து அதிமுகவில் சேர்ந்வர் என்பது குறிப்பிடத்தக்கது.