Skip to main content

முறையற்ற உறவு; தட்டிக்கேட்ட மனைவியை கொன்ற கணவர்! 

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

Lady passed away police arrested her husband and his girl friend

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பா.கிள்ளனூர் ஊரைச் சேர்ந்தவர் பாபு என்கிற ஏழுமலை(29). இவருக்கு திருமணமாகி மனைவியும் மூன்று வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் காலை ஏழுமலை மனைவி, அவரது வீட்டின் பின்புற பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் இறந்த நிலையில் சடலமாக தொங்கியுள்ளார். 

 

தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் குறித்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

 

அவர்களின் விசாரணையில், இறந்த பெண்ணின் கணவர் ஏழுமலைக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி என்பவரின் மனைவிக்கும் இடையில் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இந்த தகவல் ஏழுமலையின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 4ம் தேதி இரவு ஏழுமலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மனைவியை ஏழுமலை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்டு பதட்டம் அடைந்த ஏழுமலை, தனது அக்காவின் கணவர் ரவி கார்த்திக்கை அழைத்து வந்து இருவரும் சேர்ந்து மயக்கத்தில் இருந்த பெண்ணின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். 

 

பின்னர், ராஜீவ் காந்தி மற்றும் அவரது மனைவி ஆகியோரை வரவழைத்து அவர்கள் உதவியுடன் நான்கு பேரும் சேர்ந்து அப்பெண்ணை வீட்டுக்கு பின்புறம் இருந்த மரத்தில் தூக்கு மாட்டிதொங்க விட்டுள்ளனர். அதன் பிறகு மனைவி தற்கொலை செய்து கொண்டதாக  ஏழுமலை நாடகமாடியுள்ளார். போலீஸ் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஏழுமலை, ராஜீவ்காந்தி, ராஜீவ் காந்தியின் மனைவி ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ரவி கார்த்திகை தீவிரமாக போலீஸார் தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.