Skip to main content

நடிகர் விவேக் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த எல்.முருகன்..! 

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

L. Murugan expressed his condolences to the family of actor Vivek ..!

 

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக 16.04.2021 அன்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் 17.04.2021 அன்று அதிகாலை சுமார் 04.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் மறைவுக்கு இந்திய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். 

 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விவேக்கின் இல்லத்தில் அவரது உடலுக்குப் பல்வேறு தரப்பினரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன் தொடர்ச்சியாக, நடிகர் விவேக்கின் உடல், அவரது இல்லத்தில் இருந்து மேட்டுக்குப்பம் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, காவல்துறை மரியாதையுடன் 78 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், காவல்துறை சார்பில் நடிகர் விவேக்கிற்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பின்பு, தகன மேடையில் உள்ள விவேக்கின் உடலுக்கு மகள் தேஜஸ்வினி இறுதி சடங்குகளைச் செய்தார். அதைத் தொடர்ந்து, விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

 

L. Murugan expressed his condolences to the family of actor Vivek ..!

 

அதனைத் தொடர்ந்து நேற்று (18.04.2021), தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மறைந்த நடிகர் விவேக்கின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். மேலும் விவேக்கின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.