k.s.gita land case hearing on monday

சென்னை அடையாறில் உள்ள குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை, தன்னுடைய சகோதர, சகோதரிகளின் அனுமதியின்றி, போலியாக அவர்களின் கையெழுத்திட்டு, இரண்டு வெவ்வேறு நபர்களுக்கு விற்ற K.S. கீதா மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

Advertisment

K.S.கீதா என்பவர் KSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தாளாளராக இருந்து வருகிறார். மேலும், ஊழலுக்கெதிரான சுதந்திரா கட்சியின் தேசிய தலைவராக இருந்து, அந்த அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு, தன் குடும்பத்திற்கு சொந்தமான நிலங்களை தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனுமதி இல்லாமல், போலியான கையெழுத்திட்டு, போலியான ஆவணங்கள் தயார் செய்து, வேறு இரண்டு நபர்களுக்கு விற்றதற்காக K.S. கீதாவின் சகோதரர் சரத் கக்குமன்னு மற்றும் அவரது சகோதரி பீனா ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மேற்சொன்ன K.S.கீதா மற்றும் C.R.ரவிச்சந்திரன் என்பவர் மீது, 120(b),419,420,465,467,468,471r/w34 போன்ற இந்திய தண்டனைச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சென்னை எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு சிறப்பு மாஜிஸ்திரேட்டிடம் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது (CC No. 5241/2020).

Advertisment

இந்த வழக்கானது, வருகிற திங்கட்கிழமை 18-01-2020 அன்று எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு சிறப்பு மாஜிஸ்திரேட்டிடம் விசாரணைக்காக வருகிறது. ஏற்கெனவே இந்த வழக்கு சம்பந்தமாக எதிர்த் தரப்புக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், K.S.கீதா மற்றும் C.R.ரவிச்சந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.