நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய அரசியல் கட்சிகள் பிரச்சார களத்தில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமிதற்போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z1_34.jpg)
நாங்கள் நம்பி ஏமாந்து விட்டோம். 2010 ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இல்லாத நேரம் அந்த நேரத்தில் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு நிறைய பேர் மாறிக்கொண்டிருந்தனர். அப்பொழுதுஜெ.வை போயஸ் இல்லத்தில் சந்தித்து ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் சில கோரிக்கைகளை வலியுறுத்தினோம். ஆட்சிக்கு வந்த பிறகு செய்கிறேன் என்று சொன்னார் அதனால் ஆதரவு கொடுத்தோம் ஆனால்பின்னர் மறந்துவிட்டார் எனக்கூறிய அவர்,
தற்போதும் சில கோரிக்கைகளை முன்வைத்து மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் ஆனால் அதிமுக அரசு அதை நிறைவேற்றவில்லை எனவே நாங்குநேரி, விக்கிரவாண்டிஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500X300_57.jpg)