Skip to main content

20 தொகுதிகளில் போட்டி! புதிய தமிழகம் முடிவு

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 

புதிய தமிழகம் கட்சி்யின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.    மக்களவை மற்றும்   இடைத்தேர்தல்களில் கவுரமான இடங்களை ஒதுக்க முன்வரும் பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம்.  

 

k

 

பட்டியலின பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோருடன் கூட்டணி வைக்கலாம் என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.   இரண்டுமே நடைபெறாவிட்டால் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் அதிகம் வாழும் தென்காசி, நெல்லை உள்பட 20 மக்களவை தொகுதிகளிலும் ,  ஒட்டப்பிடாரம் உள்பட 12 சட்டப்பேரவை தொகுகளிலும் அரசியல் இயக்கங்களை ஒன்றிணைத்து தேர்தல் சந்திப்பதற்கான வியூகங்களை வகுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.   

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அதிமுக இணையாமல் வெற்றி சாத்தியமில்லை' - ஓபிஎஸ் பேட்டி

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
'Victory is not possible without ADMK alliance'-OPS interview

அதிமுக ஒன்றிணையாமல் வெற்றி சாத்தியமில்லை என  முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில், 'விக்கிரவாண்டி தொகுதியில் இரண்டு இலைகளுடன் கூடிய மாங்கனி இருக்கிறது என வலியுறுத்திச் சொல்லி இருக்கிறேன். அதுதான் விக்கிரவாண்டியில் வெற்றி பெறப் போகிறது. அதிமுக என்பது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதாவும் தொண்டர்களை வைத்து இதை மாபெரும் இயக்கமாக உருவாக்கினார்கள். உறுதியாக ஒரு தொண்டன் அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரி செய்யாவிட்டால் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஓபிஎஸ் ஒருபோதும் அதிமுகவிற்கு உண்மையாக இருந்தது கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, ''நேற்று இதுகுறித்து நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறேன். இதற்கு மேல் விளக்கம் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஏனென்றால் கட்சியின் நலன் கருதிப் பேசாமல் இருக்கிறேன். அவரைப்போல நான் தெனாவெட்டாகவோ, சர்வாதிகாரமாகவோ பேச மாட்டேன் என்பது நாட்டு மக்களுக்கும், கட்சித் தோழர்களுக்கும் தெரியும். இந்தச் சூழ்நிலையில் கட்சி இணைப்பதுதான் ஒரே வழி. நடைபெற இருக்கின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்குப் பின்னர் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் கட்சி இணையாமல் சாத்தியமில்லை'' என்றார்.

Next Story

மாஞ்சோலை விவகாரம்; புலிகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக வனத்துறைக்குக் கடிதம்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Manjolai Affair Tiger Conservation Commission letter to Tamil Nadu Forest Dept

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75,000 ஏக்கர் பரப்பளவு காடுகளில் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்காக 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் குத்தகை 2028 ஆம் ஆண்டில் முடிவடைகிறது. மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்தனர். குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய நலனுக்காக விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என இதற்கான அறிவிப்பை தனியார் நிறுவனம் நோட்டீஸ் வாயிலாக வெளியிட்டது. மேலும், அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் அந்தத் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்னதாக தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

அதே சமயம் மாஞ்சோலை மக்களை அங்கிருந்து வற்புறுத்தி வெளியேற்றுவதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக வனத்துறையிடம் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக வனப்பாதுகாவலருக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில், “திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலமூக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி கிராமங்களில் உள்ள பாரம்பரிய பழங்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது தொடர்பாக கிருஷ்ணசாமியின் கடிதம் வரப்பட்டுள்ளது. எனவே, இது குறித்த உண்மை நிலை மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை விரைவில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.