Skip to main content

கொல்லம் நீட் சர்ச்சை விவகாரம்... மேலும் இருவர் கைது!

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

Kollam Neet Controversy... Two More Arrested!

 

நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு கடந்த 17ம் தேதி நடைபெற்ற நிலையில் கேரள மாநிலம் கொல்லம் அருகே நீட் தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை களையச் செய்து தேர்வு எழுத அனுமதித்ததாக புகார்கள் எழுந்தது. இது குறித்து மாணவி ஒருவரின் தந்தை புகார் தெரிவித்திருந்த நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள அமைச்சர் பிந்து கடிதம் எழுதி இருந்தார்.

 

இந்த சம்பவத்தில் உண்மையைக் கண்டறியக் குழு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் அமைந்துள்ளது. அக்குழுவில் இடம்பெற்றுள்ள தேசிய தேர்வு முகமை உயர் அதிகாரிகள் கொல்லம் சென்று இதுதொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர். நீட் தேர்வு மையமாக செயல்பட்ட கல்லூரி நிர்வாகத்தினை சேர்ந்த இருவர் மற்றும் தேர்வின் பொழுது உதவும் பணியிலிருந்த தனியார் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் என மொத்தம் ஐந்து பேரை கேரள காவல்துறை கைது செய்திருந்தது.

 

இதுதொடர்பாக கேரளாவின் கொல்லம் பகுதியில் பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய அந்த கல்வி மையத்தின் முன் நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வி நிலையத்தின் ஜன்னல்கள் போன்ற உடைமைகளை உடைத்து நொறுக்கினார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்லம் மார்தோமா கல்வி நிலையத்தின் துணை முதல்வர் சூரியன், தேர்வு மைய கண்காணிப்பாளர் ஷாம்நாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அச்சுறுத்தும் 'நிபா' - கேரளா விரையும் மத்தியக்குழு

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
Threatening 'NIPA'-Kerala Rushing Central Committee

கேரளாவில் நிபா வைரஸ், பறவை காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் அவ்வப்போது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது.

பறவை காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் ஏற்பட்டால் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு சோதனைகள் நிகழ்த்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்கத்தில் இருந்து ஒரு குழு கேரளாவிற்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

உச்சநீதிமன்ற உத்தரவின் படி நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
According to order of Supreme Court,  results of NEET exam are published

இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன. 

அதே சமயம், நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில் இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நேற்று(18.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நீட் தேர்வு வினா - விடைகளை, மே 5ம் தேதி காலையிலேயே மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படியென்றால் மே 5ம் தேதிக்கு முன்பே யாரோ ஒருவர் அனைத்து வினாக்களுக்கும் விடையை தயார் செய்திருக்கிறார்.

இது உண்மையாக இருந்தால், மே 4ம் தேதி இரவே வினாத்தாள் கசிந்துள்ளது. இதில் 2 சாத்தியக்கூறுகள் உண்டு. ஒன்று, வங்கி லாக்கருக்கு அனுப்பிவைக்கும் முன்பே வினாத்தாள் கசிந்திருக்க வேண்டும். அல்லது தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும்போது கசிந்திருக்க வேண்டும். எனவே மே 3 - 5 தேதிகளுக்குள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதில் சரியாக எப்போது கசிந்தது என்பதுதான் கேள்வி” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும் அவர், “நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக   நாளை(20.7.2024) மாலைக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.   

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டுள்ளது. exam.nta.ac.in  என்ற இணையதளத்தில் மையங்கள், நகரங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.