Skip to main content

அமித்ஷாவை தெரியும் என ஆட்டம் போடும் கோடம்பாக்கம் ஸ்ரீ!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020


 
அகில இந்தியா இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ என்று அழைக்கப்படும் ஸ்ரீகண்டன் மீது அவரது அமைப்பின் மகளிர் அணியில் மாநிலச் செயலாளர் பதவி வகித்த பெண் நிர்வாகி, சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்திருந்தார். அதன் பேரில் சென்னை கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் கோடம்பாக்கம் ஸ்ரீ தலைமறைவானார். இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


 

chennaiடில்லியில் உள்ள அமித்ஷா, நிதின்கட்கரி, ராஜ்நாத்சிங் என முக்கிய புள்ளிகளுடன் புகைப்படம் எடுத்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி. தலைவர்களுடன் நெருக்கமாக உள்ளதுபோல காட்டி கொண்டு, மத்திய பெட்ரோல்த்துறை அமைச்சரை எனக்கு தெரியும் என்று இன்டியன் கேஸ் ஏஜெண்ட் வேலை வாங்கி தருவதாக கூறி கோயம்பத்தூரை சேர்ந்த கெளதமன் என்பவரை 20 லட்சம் ஏமாற்றியுள்ளார்.
 

அதோடு நின்றுவிடாமல் இலங்கையில் தேடப்பட்ட ஒரு குற்றவாளியை பூந்தமல்லியில் கைது செய்தனர். அவருக்கு நெருக்கமான சுரேஷ் என்பவரும் நெருங்கிய நண்பர்கள் அந்த சுரேஷ் மூலமாகாத்தான் பல பின்புல பிஸ்னஸ் செய்துவந்துள்ளார் ஸ்ரீ. 


 

இலங்கையில் இருந்து கப்பல் மூலமாகவும், ஏர்போர்ட் மூலமாகவும், பவுடர், பிரவுன் சுகர், கோக்கைன், ஹெராயன் போன்ற போதை பொருட்களை எடுத்துவந்து முதல் கட்டமாக ஸ்ரீபெரும்புத்தூர், சுங்கவார்சத்திரம் எனும் இடத்தில் இருந்து சென்னை முழுக்க கல்லூரி மாணவர்கள் வினியோகம் செய்யப்பட்டது. அதன்பிறகு குன்றத்தூர், ஐயப்பந்தாங்கல் என இடங்களை மாற்றி தனது பணியை சிறப்பாக செய்துவந்துள்ளார்.

 
இதன் இடையில் சுரேஷ் இலங்கை வாழ் மக்களை குடியுரிமை பெற்று தருவதாக ஸ்ரீயிடம் அழைத்து வந்து, அமித்ஷாவுடன் நெருக்கமான தொடர்புடையவர் என்று கூறி கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுள்ளார். இதில் காவல்துறையே கண்டும் காணமல் இருக்கும் நிலையில் மேலும் அவரை பற்றி வழக்கு தொடுத்தவர்களை மேலும் மிரட்டி வருகிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மத்திய அமைச்சர் ஆறுதல்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Union Minister consoles Armstrong's wife

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தப் போது கடந்த 14 ஆம் தேதி (14.07.2024) அதிகாலையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். அதே சமயம் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.

இதற்கிடையே கடந்த 9 ஆம் தேதி (09.07.2024) பெரம்பூர் அயனாவரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிஆகியோர் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில் மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் மற்றும் அவரது மனைவி பொற்கொடியை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இன்று (17.04.2024) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த சந்திப்பின் போது ம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரிடம் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ‘கொலை சம்பவம் குறித்த  விசாரணைக்கு மத்திய அரசு உதவியாக இருக்கும்.’ எனத் தெரிவித்தார். 

Next Story

சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பேற்பு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
New Commissioner of Chennai Corporation takes charge

தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் நேற்று (16.07.2024) உத்தரவிட்டிருந்தார். இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டிருந்த உத்தரவில், ‘தமிழக உள்துறை செயலாளர் அமுதா பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சிட்கோ நிர்வாக இயக்குநராக இருந்த மதுமதி பள்ளிக்கல்வித்துறை செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளராக கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராகக் குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

New Commissioner of Chennai Corporation takes charge

மேலும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சந்திரகலாவும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அருணாவும் நீலகிரி மாவட்ட ஆட்சியராக லஷ்மி பையா தன்னீரும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பிரியங்காவும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஆகாஷூம் நியமிக்கப்பட்டனர்.

அதே போன்று அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்தினசாமியும், கடலூர் மாவட்ட ஆட்சியராக ஆதித்யா செந்தில்குமாரும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அழகுமீனாவும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ்வும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிம்ரன்ஜீத் கலோனும் நியமிக்கப்பட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தமிழகம் நேற்று ஒரே நாளில் முக்கிய துறைகளின் செயலாளர்கள் உள்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். 

New Commissioner of Chennai Corporation takes charge

இந்நிலையில் கூடுதல் தலைமைச் செயலாளரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ. ராதாகிருஷ்ணன் தனது பொறுப்புகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்ட குமரகுருபரனிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.