திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியான திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நடை பயிற்சி மேற்கொண்ட போது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலைவழக்கு தொடர்பாக 4 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை இன்று (18.01.2023) நடைபெற்றது. உண்மை கண்டறியும் சோதனைக்கு மோகன்ராம், தினேஷ் மற்றும் நரைமுடி கணேசன் ஆகிய மூன்று நபர்கள் சென்னை காமராஜர் சாலையில் உள்ள தடய அறிவியல் துறை வளாகத்தில் உள்ள உண்மையை கண்டறியும் சோதனை முடிந்து தற்போது வெளியே வந்தனர்.