Skip to main content

பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேற காரணமான சாண்டி!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி மற்றும் சேரன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.தற்போது பிக் பாஸ் வீட்டில் 6 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். 
 

big boss



இந்நிலையில் கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவிக்  கொண்டிருக்கிறது. பிக் பாஸ் போட்டியாளர்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறார். அதில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் 5 லட்சம் கொடுத்து இதை யாரவது ஒருவர் பெற்றுக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறலாம் என கூற, என்னை இந்த வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை, எனவே நான் வெளியேறுகிறேன் என கூறிவிட்டு கவின் வெளியேறயுள்ளதாக அந்த தகவலில் உள்ளது.  மேலும் பிக் பாஸ்ஸில் இருந்து கவின் வெளியேற காரணம் என்னவென்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சாண்டி எதுக்கு நீ இப்படி பண்ணிட்டு இருக்க என கேட்க, கவின் ஒண்ணுமே இல்ல இன்னும் பத்தே நாள் தான். முடிச்சிட்டு வெளியே வாங்க என கூறுகிறார். மேலும் இவ்வளவும் பண்ணிட்டு என்னால் கூச்சமே இல்லாமல் மேடை ஏறி நிக்க முடியாது என கூறுகிறார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

படம் வெளியாவதற்கு முன்பே பரிசு - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
star movie director elan got a plot from producer before a movie release

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியான நிலையில் அண்மையில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

star movie director elan got a plot from producer before a movie release

இந்த நிலையில் இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். இதனை இளன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ள எனது தயாரிப்பாளர் பெண்டேலா சாகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவரை படம் பார்க்க அழைத்தபோது, ​​அவர் அதைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு பரிசளிக்க வேண்டும் என்று கூறினார்” என பதிவிட்டுள்ளார்.

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; குழு அமைத்த கமல்ஹாசன்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Parliamentary elections approaching; Kamal Haasan announce Team

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு மற்றும் கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகிய விஷயங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஒருங்கிணைப்புக் குழு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏ.ஜி. மௌரியா, தங்கவேலு, அருணாச்சலம் ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும் இவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.