Published on 27/05/2020 | Edited on 27/05/2020

இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் சார்பில் காட்டுமன்னார்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், விடுதலை சிறுத்தைகள் விவசாய அணியின் மாநில செயலாளர் பசுமைவளவன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் வயல்பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த மின் மீட்டருக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.