மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 14 ந்தேதி முதல் ஜூன் 15 ந்தேதி வரை 61 நாட்களாக மீன்பிடித்தடைக் காலம் இருந்து வந்தது. இந்நிலையில் தடைக்காலம் முடிந்து 15-ந்தேதி மீனவர்கள் ஆர்வமுடன் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. தடைக்காலத்தில் சிறிய வகை படகுகள் மட்டுமே சென்று மீன்களைப் பிடித்து வந்த நிலையில் இருந்தபோது குறைந்த அளவிலான மீன்கள் மட்டுமே கிடைத்தது.
இந்நிலையில் கடந்த 15ம் தேதியுடன் மீன் பிடித்தடைக் காலம் முடிவுக்கு வந்ததால், அனைத்து வகையான படகுகளும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்த நிலையில் இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை அதிக அளவிலான மீன்கள் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்கு விற்பனைக்காக வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அசைவ பிரியர்கள் அதிகாலை முதல் மீன் வியாபாரம் பரபரப்பாக இருந்தது.