
காரைக்குடியில் பாலியல் தொல்லை அளித்ததால் கல்லூரி மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லூரி மாணவி ஒருவருக்கு கல்லூரி மாணவர்களான பாலகணேஷ், அவரது நண்பர் இளவரசன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் மன அழுத்தத்திலிருந்த மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்திய நிலையில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாலகணேஷ், இளவரசன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.