Skip to main content

விவகாரத்து கேட்பதற்கு மனைவி சொன்ன காரணம்... அதிர்ச்சியில் உறைந்த கணவர் எஸ்.பி.யிடம் புகார்...

Published on 28/08/2020 | Edited on 28/08/2020
k

 

 

குமரி மாவட்டத்தில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கரம் பிடித்த காதலியின் கள்ள காதலால் மனமுடைந்த காதலன் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளார். 

 

மணவாளக்குறிச்சியை சோ்ந்த ராஜகோபால் 2008-ல் மண்டைக்காடு கோவிலுக்கு சென்றபோது அங்கு வந்த பத்மனாபபுரம் அருகே சாரோடை சோ்ந்த அனுஷாவும் ஒருவருக்கொருவா் பார்த்து இருவரும் காதல் வயப்பட்டு பெற்றோருக்கு தெரியாமல் காதலா்களாக சுற்றி திரிந்தனர். நாளடைவில் இவா்களின் காதல் விவகாரத்தை தெரிந்த பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் நண்பா்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனா். பின்னா் கொஞ்ச நாளில் அனுஷா வீட்டில் இருவரையும் ஏற்றுக்கொண்டனா்.

 

இந்த நிலையில் ராஜகோபால் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுட்டு துபாய்க்கு ஒட்டல் வேலைக்கு சென்றார். அவா்களுக்கு ஓரு ஆண் குழந்தையும் உள்ளது. இதனை தொடா்ந்து ராஜகோபாலையும் அவனுடைய பெற்றோர்கள் ஏற்று கொண்டனா். இந்த நிலையில் தான் கடந்த பிப்ரவரி மாதம் அனுஷா ராஜகோபாலிடம் விவகாரத்து கேட்டு மணவாளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டுக்கு விவகாரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

 

இதையடுத்து துபாயில் இருந்து ராஜகோபால் உடனே ஊருக்கு வந்தார். இந்த நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி மாலை மாவட்ட எஸ்.பி.யிடம் மனு கொடுத்த ராஜகோபால் நம்மிடம் கூறும்போது, மனைவி விவகாரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இருந்தாலும் என்னுடைய 11 வயது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவளை சமாதானம் செய்து அவளுடன் சோ்ந்து வாழ முயற்சி செய்தேன். பின்னா் குழித்துறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். 

 

அங்கு விசாரணைக்கு வந்த மனைவி அனுஷா 5 மாதம் கா்ப்பமாக இருப்பதாக கூறியதால் அதிர்ச்சியடைந்தேன். அவளின் கா்ப்பத்துக்கு காரணமானர் தக்கலையில் வங்கி ஓன்றில் பணியாற்றும் ஒரு ஊழியர். நான் துபாயில் இருந்து அவளுக்கு அனுப்பும் பணத்தை எடுக்க செல்லும்போது அந்த ஊழியருக்கும் அவளுக்கும் தொடா்பு ஏற்பட்டு கள்ள காதலா்களாக இருந்துள்ளனா். மேலும் நான் அனுப்பிய 55 பவுன் மற்றும் அவள் பெயரில் வாங்கிய  இரண்டரை சென்ட்  நிலத்தையும் விற்று பணத்தையும் கள்ளகாதலனிடம் கொடுத்துள்ளார்.

 

இதனால் என்னுடைய மகன், நகை, நிலத்தையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளேன். பெற்றோரின் பேச்சை கேட்காமல் காதலிதான் எல்லாமே என நினைத்து நம்பி சென்ற என் வாழ்க்கையை அழித்து விட்டார்கள் என கூறினார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிறந்தநாள் சர்ப்ரைஸை கண்டுகொள்ளாத கணவன் கொலை; மனைவி கைது

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Husband lose their live for not seeing birthday surprise; Wife arrested

கணவருக்காக தடபுடலாக பிறந்தநாள் ஏற்பாட்டை மனைவி மேற்கொண்ட நிலையில் அதனைக் கணவன் பாராட்டாததால் மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் மிச்சல் ஓய் பீட்டர்ஸ் என்ற பெண் தன்னுடைய கணவனின் ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார். ஆனால் மனைவியின் பிறந்தநாள் ஏற்பாடுகளை கணவன் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிய வருகிறது. அதனைத் தொடர்ந்து பிறந்தநாள் அன்று பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானம் ஒன்றை அருந்திய போது கணவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் செய்த பரிசோதனையில் கணவனின் தொண்டை பகுதியில் புண் ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் சோதனை செய்தபோது சோடாவில் பூச்சிக்கொல்லி மருந்தை மனைவி குளிர்பானத்தில் கலக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மனைவி மிச்சல் ஓய் பீட்டர்ஸை போலீசார் விசாரித்துள்ளனர். அதில் பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகளை கணவன் பாராட்டதால் ஆத்திரத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்ததை மனைவி ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

கணவனின் வெறிச்செயல்; கர்ப்பிணிப் பெண்ணிற்கு கத்திகுத்து!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Husband stabs pregnant wife

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர், வீரராகவவலசை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். ஓட்டுனரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் ஆன நிலையில் தற்போது சுபாஷினி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் வழக்கம்போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் சுபாஷினி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று இருவீட்டுப் பெற்றோரும் காவல் நிலையத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே மது போதையில் வீட்டிற்கு வந்த கணவன் விஜயகுமார் மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுபாஷினியின் வயிறு கழுத்து கை என நான்கு இடங்களில் குத்தியதில் படுகாயமடைந்தார். 

அவரின் அலறலைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரத்தவெள்ளத்தில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு மது போதையில் இருந்த கணவன் விஜயகுமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.