Skip to main content

பேனர் வைத்த குற்றவாளி ஓடி ஒளிய முடியாது-கமல்ஹாசன்!  

Published on 15/09/2019 | Edited on 15/09/2019

சென்னை பள்ளிக்கரணையில் அரசியல் பிரமுகர் வைத்திருந்த திருமண வரவேற்பு பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் விபத்துக்குள்ளாகி இறந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் இனி வரவேற்பு பேனர்கள் வைக்க கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் குரோம்பேட்டையில் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 
 

kamal

 

இது குறித்து குறிப்பிட்ட கமல்ஹாசன், பேனர் கலாச்சாரத்தை ஒழியுங்கள் அப்படி ஒழிக்கவில்லை என்றால் இந்த கலாச்சாரத்தை மக்களே ஒழிப்பார்கள் அதற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும் என்றார். அதேபோல் பேனர் வைத்த குற்றவாளி அதிக நாட்கள் ஓடி ஒளிய முடியாது எனவும் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பயங்கர விபத்தால் இளைஞர் பலி; ஆந்திர எம்.பியின் மகள் அதிரடி கைது

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Andhra MP's daughter arrested for Youth happened in tragic accident

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (22). இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று பெசன்ட் நகர் சாலையோர நடைபாதையில் படுத்திருந்தார். இவர் மது அருந்திவிட்டு போதையில் படுத்து உறங்கியதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார், சாலையோரம் படுத்திருந்த சூர்யா மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சூர்யா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள், காரை மறிக்க முயன்ற போது காரில் இருந்த இரண்டு பெண்களும் அங்கிருந்து காருடன் தப்பி சென்றனர். 

இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் சாலையோரம் படுத்திருந்த இளைஞர் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே காருடன் தப்பிச் சென்ற இரண்டு பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், பெசண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த பீடா மாதுரி (32) என்பவர் தான் காரை ஓட்டி வந்தது என தெரியவந்தது. மேலும், அவர் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி பீடா மஸ்தான் ராவின் மகள் எனவும் தெரியவந்தது. 

இதனையடுத்து, பீடா மாதுரி மீது விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் காரில் வந்த மற்றொரு பெண் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, இது பிணையில் வரக்கூடிய சட்டப்பிரிவு என்பதால் காவல் நிலைய பிணையில் பீடா மாதுரி விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஆற்றில் அடித்துச் சென்ற 8 கோடி ரூபாய் பாலம்; திறப்பு விழாவிற்கு முன்பே அதிர்ச்சி!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
8 crore rupees bridge washed away in the river; Shock before the opening ceremony

கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த சம்பவம் பீகாரில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் ஒன்று கட்டப்பட முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. பல்வேறு கட்டுமான பணிகளுக்கு பின் மொத்தமாக 7 கோடியே 89 லட்சம் ரூபாய் என கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்து வந்த மக்களுக்கு இந்த பாலம் பேருதவியாக இருக்கும் எனக் கருதப்பட்ட நிலையில் திறப்பு விழா இன்னும் சில நாட்களில் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் திடீரென பாலம் இடிந்து விழும் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டுள்ளதால் இடிந்து விழுந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாலம் இடிந்து விழுந்த நேரத்தில் அந்த பகுதியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் நிகழவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுத் திறப்பு விழாவிற்கு காத்திருந்த பாலம் சரிந்து விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லும் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.