Skip to main content

போலீஸை ஏமாற்றி விசாரணை கைதி எஸ்கேப்!

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

kallakurichi thirukovilur police enquiry man escaped incident 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே திருவண்ணாமலை - எலவாசனூர் கோட்டை சாலையில் திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ் குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் ரத்தினம் என்பவர் டாஸ்மாக் மதுபானங்களை கள்ளத்தனமாக கொண்டு வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவல்படி அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அதோடு அவரிடமிருந்து 58 மதுபாட்டில்கள் மற்றும் ஐந்து லிட்டர் சாராயம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

 

அதேபோல் பிகே மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஹரி விக்னேஷ் என்பவரும் மது பாட்டில் விற்பனை செய்தபோது கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரையும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து சிறையில் அடைப்பதற்காக ஜி அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ பரிசோதனை செய்ய கொண்டு சென்றனர். இரண்டு கைதிகளையும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல வேண்டி அவர்கள் இருவரையும் காவலர் புஷ்பராஜ், சம்பத் இருவரும் தனித்தனி இருசக்கர வாகனத்தில் கைதிகளை அமர வைத்து மருத்துவமனை நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்றனர். அப்போது வயல்வெளி வழியாக வாகனத்தில் செல்லும்போது கைதி ரத்தினம்  சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூற வாகனத்தை நிறுத்தினார்.

 

சிறுநீர் கழிக்க ஒதுங்கிய ரத்தினம் திடீரென கரும்பு வயலுக்குள் தப்பி ஓடி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர் இருவரும் கரும்பு வயலுக்குள் புகுந்து நீண்ட நேரம் தேடியும் ரத்தினம் கிடைக்கவில்லை. இதையடுத்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். திருக்கோவிலூரில் இருந்து இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் கைதி தப்பி ஓடிய கரும்பு காட்டு பகுதிக்கு விரைந்து சென்றனர். அந்தக் கரும்பு காட்டை சல்லடை போட்டு நீண்ட தேடலுக்குப் பிறகு அங்கு பதுங்கி இருந்த ரத்தினத்தை கைது செய்தனர். அதன் பிறகு பலத்த பாதுகாப்புடன் மருத்துவ பரிசோதனை செய்து ரத்தினத்தை திருக்கோவிலூர் கிளைச் சிறையில் அடைத்தனர். சிறுநீர் கழித்துவிட்டு வருவதாகக் கூறி கைதி தப்பி ஓடி மீண்டும் பிடிபட்ட சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண்ணை ஏமாற்றிய மேனஜர்! கொல்கத்தாவில் வளைத்து பிடித்த தமிழ்நாடு போலீஸ்

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
The manager who cheated on the woman! Tamil Nadu police arrested in Kolkata

வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் சுண்ணாம்புக்கல் சரக்குகளை இந்தியாவிற்குக் கொண்டு வர, 42 லட்சம் ரூபாய் சரக்கு புக்கிங் கட்டணம் வசூலித்துக்கொண்டு மோசடி செய்த இந்தோனேசிய நிறுவன ஊழியரை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருடைய மனைவி பூவிழி (40). இவர், வெளிநாடுகளில் இருந்து சுண்ணாம்புக்கல் இறக்குமதி செய்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம், துபாய், பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து சுண்ணாம்புக்கல் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்தார். அங்கிருந்து கப்பலில் சரக்குகளைக் கொண்டு வருவதற்காக ஆன்லைன் மூலம் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். 

அந்த நிறுவனத்தினரும், சுண்ணாம்புக்கல் சரக்குகளை காரைக்கால் துறைமுகத்திற்குக் கப்பலில் கொண்டு வந்து இறக்கிவிட ஒப்புக்கொண்டு, 42.42 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்தனர். இந்தக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் கடந்த ஜனவரி மாதம் பூவிழி செலுத்தினார். சரக்கு புக்கிங் செய்த நிறுவனம், அதன்பிறகு பூவிழியை தொடர்பு கொள்ளவே இல்லை. சரக்கும் குறிப்பிட்ட நாளில் வந்து சேரவில்லை. இதுகுறித்து பூவிழி தரப்பில் விசாரித்தபோது, இந்தோனேசியாவைச் சேர்ந்த அந்த நிறுவனத்தார் திட்டமிட்டு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவர், சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். சரக்கு புக்கிங் செய்த இந்தோனேசிய நிறுவனத்தின் கிளை கொல்கத்தாவில் இயங்குகிறது. அங்கு மேலாளராக பணியாற்றி வந்த எஸ்.சி.ஜனா (45), ஊழியர்கள் எம்.சி.குண்டு, ஆர்.கே.நாக், தீபக் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களைத் தேடி வந்தனர். 

இவர்களில் எஸ்.சி.ஜனா கொல்கத்தாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த சேலம் மாவட்டக் காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். விசாரணையில், பூவிழியிடம் மோசடியாக பெற்ற பணம், இந்தோனேசியாவில் உள்ள தீபக்கிடம் கொடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. ஜனாவை காவல்துறையினர் சேலம் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடர்புடைய தீபக் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர். 

Next Story

மது அருந்த பணம் தராத மனைவி; அடித்தே கொன்ற கணவன்

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
husband beat his wife to passed away because she didn't pay him to drink liquor

மகராட்ஷ்ரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர்கள் மொய்தினுதின் அன்சாரி(42) - பர்வீன்(26) தம்பதியினர். இந்த நிலையில் மொய்தினுதின் அன்சாரிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அன்சாரி தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், இதனிடையே கணவர் அன்சாரி மனைவி பர்வீனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்டும் தகராறு செய்து வந்திருக்கிறார். 

இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் கணவர் அன்சாரி மனைவி பர்வீனிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று பர்வீன் கூற ஆத்திரமடைந்த அன்சாரி அவரை பலமாக தாக்கிவிட்டு வீட்டில் இருந்து தப்பித்து சென்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த பர்வீனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் பர்வீனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் மருத்துவமனை வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.