Skip to main content

"கள்ளக்குறிச்சி கலவரம் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திடுக"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்! 

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

கள்ளக்குறிச்சி கலவரம் குறித்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வைச் சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். 

 

கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். உளவுத்துறை சரியானபடி, தகவல் சேகரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், கள்ளக்குறிச்சி கலவரத்தைத் தடுத்திருக்க முடியும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கோட்டைவிட்டு தடுமாறுகிறது தி.மு.க. அரசு. வன்முறையில் பள்ளியும், மாணாக்கர்களின் சான்றிதழ்களும் தீக்கிரையானதற்கு யார் பொறுப்பேற்பது? 

 

கனியாமூர் பள்ளி மாணாக்கர் கல்வியைத் தொடர்வது பற்றி அரசு வழக்கம் அளிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” - அருண் விஜய் புகார்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
arun vijay complaint against you tube channel

அருண் விஜய் கடைசியாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அருண் விஜய், பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், தற்போது தனது குடும்பம் குறித்து தனியார் யூட்யூப் ஒன்றில் தவறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அருண் விஜய் சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த புகார் மனுவில், தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த அருண் விஜய், அதனால் தனது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். 

Next Story

முன்னாள் அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏக்கள் வரை; தொடரும் ரெய்டு

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
From former ministers to MLAs; Raid on

அண்மையாக சில மாதங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்தநிலையில் அதிமுக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டெண்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் அவருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.