Skip to main content

201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள்!(படங்கள்)

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

 

திரைத்துறை, எழுத்து உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

t


இயற்றமிழ் துறையில் 2011-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது கிழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதேபோன்று நாடக நகைச்சுவை நடிகர் டி.வெங்கட்ராமன், திரைப்பட நடிகை குட்டி பத்மனி, கலை விமர்சகர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் உட்பட மொத்தம் 30 கலைஞர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலைமாமணி விருதுடன் தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் காசோலையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

 

t

 

இலக்கிய சொற்பொழிவாளர் மு.பெ.ராமலிங்கம், பத்திரிகையாளர் அசோக்குமார், காவடியாட்டம் சிவாஜிராவ், திரைப்பட ஒளிப்பதிவாளர் என்.வி.ஆனந்தகிருஷ்ணன், திரைப்பட நடிகை வரலட்சுமி உள்ளிட்ட 30 கலைஞர்களுக்கு 2012-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.

 

t

 

திரைப்பட நடிகர் பிரசன்னா, குணச்சித்திர நடிகர் ஆர்.பாண்டியராஜன், நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உட்பட 19 நபர்களுக்கு 2013-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

 

t

 

நடிகர் கார்த்தி, குணச்சித்திர நடிகர் பொன்வண்ணன், பரத நாட்டிய ஆசிரியர் பாண்டியன், கவிஞர் மா.திருநாவுக்கரசு உட்பட 20 கலைஞர்களுக்கு 2014-ம் ஆண்டுக்கான விருதை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

 

t8

 

பாடலாசிரியர் யுகபாரதி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, திரைப்பட நடிகர் பிரபுதேவா உட்பட 20 நபர்களுக்கு 2015-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும், நடிகர் சசிக்குமார், குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா, நகைச்சுவை நடிகர் சூரி, நாட்டுப்புற பாடற் கலைஞர் கலாராணி உட்பட 20 நபர்களுக்கு 2016-ம் ஆண்டுக்கான விருதையும் முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார்.

 

t

 

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை பிரியாமணி, இயக்குநர் ஹரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, தேவார இசை சம்பந்த ஓதுவார் உட்பட 28 கலைஞர்களுக்கு 2017-ம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது.

 

t

 

இயற்றமிழ் துறையில் நிர்மலா பெரியசாமி, நகைச்சுவை நடிகர் சந்தானம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பின்னணி பாடகர் உன்னி மேனன், தோற்பாவைக் கூத்து முத்துச்சந்திரன் உட்பட 34 கலைஞர்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார்.

 

t

 

கலைமாமணி விருது பெரும் கலைஞர்களுக்கு மூன்று சவரன் எடையுள்ள பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.

 

t


 

tt

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைகளில் மக்களின் வலியை பேசியது திராவிட இயக்கம்தான்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

"It was the Dravidian movement that spoke the pain of the people through the arts" - Chief Minister M. K. Stalin's speech

 

சென்னை சங்கமம் எனும் 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி இன்று சென்னை தீவுத்திடலில் துவங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, தொழிற்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு , சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

 

இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், '' 'தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் எழுதிய வரி இது. வெறும் ஆரவாரம் காட்டக்கூடிய வரி மட்டுமல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆவணப்படுத்தப்பட்ட நம்முடைய பண்பாட்டின் இலக்கியப் பெட்டகங்களை முன்னிறுத்தக்கூடிய வரி. நெஞ்சை அள்ளக்கூடிய சிலப்பதிகாரம் என முத்தமிழ்க்காப்பியமாகப் போற்றப்படும் அளவுக்கு இயல், இசை, நாடகம் எனப் பழந்தமிழ் நாட்டின் கலைமேன்மையை திட்டவட்டமாகத் தீட்டிக்காட்டி இருக்கிறது.

 

திராவிட இயக்கம்தான் கலைகள் என்பது வசதி படைத்த வர்க்கத்தின் பொழுதுபோக்கு அம்சம் என்ற இருந்த நிலையை அடியோடு மாற்றி அவற்றை அடித்தட்டு மக்களிடத்தில் எடுத்துச் சென்ற இயக்கம். திராவிட இயக்கம்தான் ஒரு சமுதாயத்தில் ஒரு தரப்பினருக்காக சாதிகளின் பெயரால், சமயங்களில் பெயரால், சமத்துவத்திற்கு சமாதி கட்ட நினைத்த போக்கிற்கு எதிரான சம்பட்டியாக மூடப்பழக்கங்களுக்கு எதிராக கலைகளை மாற்றியது. திராவிட இயக்கம்தான் கலைகளின் வழியாக மக்களின் வலியை பேசியது. கலை பண்பாட்டு துறையின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 48 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. கலைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கலைகளை போதிக்கும் கல்விக்கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

மக்கள் கூடும் இடங்களில் கலைச் சங்கமம் என்ற பெயரில் 160 கலை நிகழ்ச்சிகளை நடத்த ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள், ஆடை ஆபரணங்கள் வழங்குவதற்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கலைமாமணி விருது பெற்ற வறிய நிலையில் வாழும் ஒவ்வொரு மூத்த சிறந்த கலைஞர்களுக்கும் பொற்கிழியாக வழங்கப்படும் விருது தொகை 50,000 ரூபாயில் இருந்து ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது'' என்றார்.

 

 

Next Story

இரண்டு படத்தில் நடித்தாலே கலைமாமணி விருதா? - நீதிமன்றம் வேதனை 

Published on 18/11/2022 | Edited on 18/11/2022

 

Kalaimamani award for acting in two films?- Court anguish

 

கலை பற்றித் தெரியாதவர்களுக்கு 'கலைமாமணி' விருதுகள் வழங்கப்படுவதாக நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

 

திருநெல்வேலியைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு தகுதி இல்லாத நபர்களுக்கு 'கலைமாமணி' விருது வழங்கப்பட்டுள்ளது. அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவானது நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, விருதுகளுக்கான மரியாதையே இந்தக் காலத்தில் இல்லாமல் போய்விட்டது எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “கலை பற்றித் தெரியாத நபர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகிறது.

 

கலைத் துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கலைமாமணி விருதுகள் இரண்டு திரைப்படங்களில் நடித்துவிட்டாலே வழங்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றத்தைக் கலைக்க நேரிடும்” என்று எச்சரித்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், தற்போது வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.