மறைந்த முதல்வர் கலைஞரின் உடல் ராஜாஜி ஹாலில் அஞ்சலிலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி ஹாலில் இருந்து மாலை 4 மணிக்கு கலைஞரின் இறுதி ஊர்வலம் துவங்குகிறது. மெரினாவில் அண்ணா சதுக்கத்தில் கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
கலைஞரின் இறுதிச்சடங்குகளுக்கான பணிகள் அண்ணா சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றன. கலைஞரின் உடல் வைக்கப்படும் சந்தனப்பேழை தயார் ஆகியுள்ளது. ’’ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’’என்று சந்தன பேழையில் பொறிக்கப்பட்டுள்ளது.