Skip to main content

கலைஞர் நினைவு மாரத்தான்: 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Published on 07/08/2022 | Edited on 07/08/2022

 

kalaignar Memorial Marathon

 

முன்னாள் முதல்வர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார்.  5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ., 42 கி.மீ. என மொத்தம் 4 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 4 பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்களுக்கான ரொக்க பரிசுகளையும், நினைவு பரிசுகளையும் வழங்கினார்.  மாரத்தான் ஓட்டத்தின் பதிவுத்தொகையாக பெறப்பட்ட ரூ.1 கோடியே 20 லட்சத்து 69 ஆயிரத்து 980ஐ சுகாதாரத்துறை செயலாளரிடம் முதலமைச்சர் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சரோடு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளின் துணைத் தூதர்கள் கலந்து கொண்டார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''அவரின் சாதனைச் சுவடுகள் என்றும் மறையாது'' - சுசீந்திரன் வாழ்த்து!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

gda


மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் தி.மு.க.வின் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞரின் 97 ஆவது பிறந்த நாளான (இன்று) ஜூன் 3-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க.வினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே கலைஞரின் பிறந்தநாளுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகள் கூறி வரும் நிலையில் இயக்குனர் சுசீந்திரன் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து 'நான் மகான் அல்ல' பட சமயத்தில் கலைஞருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...
 


"தமிழர்களின் உண்மையான தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 97 ஆவது பிறந்தநாள் இன்று. தமிழன் இந்தப் பூமியில் வாழும்வரை முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சாதனைச் சுவடுகள் என்றும் மறையாது. நீங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்த நற்தொண்டுகளை என்றும் நினைவில் கொள்வோம். உங்களை வணங்குகிறோம். 

சுசீந்திரன் மற்றும் குடும்பத்தினர்'' எனக் கூறியுள்ளார்.

 


 

Next Story

அறிவாலயத்தில் கலைஞர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை! (படங்கள்)

Published on 03/06/2020 | Edited on 04/06/2020

 


மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 97- ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி, டி.ஆர்.பாலு, துரைமுருகன், உதயநிதிஸ்டாலின் உள்ளிட்டோரும் கலைஞர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.