kalaignar

திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக திங்கள்கிழமை மாலை மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்தனர். இரவு 10.30 மணிக்கு மேல் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் திமுக முன்னணி நிர்வாகிகள் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்.

11.15 மணி அளவில் கனிமொழி மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். இதேபோல் முன்னாள் அமைச்சர் பொன்முடியும் மருத்துவமனைக்கு வந்தார்.

Advertisment