kalai ilakkiya perumandram praises CM's announcement ...!

Advertisment

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். இது தொடர்பாக அதன் பொதுச் செயலாளர் பேராசிரியர் இரா.காமராசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கலைஞர்களுக்கு 'கலைமாமணி விருது' வழங்கப்படுவதைப் போல எழுத்தாளர்களுக்கு 'இலக்கிய மாமணி' விருது வழங்கப்படும் என்றும்,இந்திய ஒன்றிய, தமிழ்நாடு மாநில மற்றும் சிறப்பு விருதுகளைப் பெற்ற இலக்கியவாதிகளுக்கு அவர்கள் விரும்பும் ஊரிலேயே அரசு சார்பில் 'கனவு இல்லம்' வழங்கப்படும் என்றும், மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளது தமிழ் எழுத்துலகத்திற்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புகளை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் வரவேற்று நன்றி தெரிவிக்கிறோம்" என கூறியுள்ளார்.