Skip to main content

க/பெ ரணசிங்கம் என் கதை.. புகார் கொடுக்க கிளம்பிய எழுத்தாளர் மிடறு முருகதாஸ்.. 

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

K/P Ranasingam

 

இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் எதார்த்தமான நடிப்பில் உருவான க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் மாவட்ட ஆட்சியராக ரெங்கராஜ் பாண்டே நடித்திருப்பார். குறைவான நேரங்களே விஜய்சேதுபதி வந்துவிட்டு சென்றுவிடுகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ், வெளிநாட்டுக்குச் சென்று பிழைக்கப்போன இடத்தில் தன் கணவன் இறந்துவிட்டார் என்ற தகவலை அறிந்து கதறுவதுடன் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு நீண்ட போராட்டமே நடத்தி இருப்பார். 

 

அப்படியும் பிரதமர் தலையிட்ட பிறகும் கூட யாருடைய சடலத்தையோ கொண்டு வந்து ஒப்படைத்து கணக்கை முடிப்பார்கள். இந்தப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் வரும் 16ஆம் தேதிக்கு பிறகு திரையரங்குகளுக்கும் வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கதை ஒரு நண்பர் சொன்ன ஒற்றைவரியில் இருந்து பிறகு கார்க்கோவில் தினசரி வரும் சடலங்களை பின்தொடர்ந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை கதையாக்கினேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் இயக்குனர் விருமாண்டி.

 


ஆனால், க/பெ ரணசிங்கம் படத்தின் மூலக்கதை என்னுடையது. 2017-ல் 'தவிப்பு' என்ற தலைப்பில் "கதைசொல்லி"  மாத இதழில் வெளியானது. 2018-ல் தூக்குக் கூடை சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது என்கிறார் எழுத்தாளர் மிடறு முருகதாஸ். இவர் த.மு.எ.க.ச புதுக்கோட்டை மாவட்டக்குழு உறுப்பினரும்கூட. இது குறித்து புகார் கொடுக்கவும் தயாராகி உள்ளார்.

 

மிடறு முருகதாஸை சந்தித்து பேசிய போது, “புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் தத்தான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த நான் பல்வேறு கலை, இலக்கிய மேடைகளில் பாட்டு, கதை, கவிதை வாசித்திருக்கிறேன். சிலம்ப பயிற்சியும் கொடுக்கிறேன். எதைப்பார்த்தாலும் எழுதி வைப்பது வழக்கம். இதைப்பார்த்து நண்பர் தூண்டுதலால் மிடறு என்ற ஹைகூ தொகுப்பு வெளியிட்டேன். தொடர்ந்து சிறுகதைகள் எழுதி இதழ்களுக்கு அனுப்பினேன். எல்லாமே பிரசுரம் ஆனது. எங்கள் உறவினர் ஒருவர் வெளிநாடு சென்று இறந்து அவர் உடலை கொண்டுவர ஏற்பட்ட சிரமங்களை நேரில் பார்த்து அதை "தவிப்பு" என்ற தலைப்பில் எழுதி 2017-ல் கதை சொல்லி இதழுக்கு அனுப்பினேன். அந்த கதை குறுநாவலாக வெளிவந்தது. அதன் பிறகு நான் எழுதிய சிறுகதைகளை 'தூக்குக் கூடை' என்ற தலைப்பில் 2018-ல் தனி புத்தகமாக வெளியிட்டேன்.


 
இப்போது நான் எழுதிய தவிப்பு சிறுகதைக்கு மெறுகேற்றி க/பெ ரணசிங்கம் என்ற பெயரில் திரைப்படமாக வந்துள்ளதை நண்பர்கள் சொல்ல நானும் படத்தைப் பார்த்தேன் மூலக்கதை என்னுடைய தவிப்ப தான் என்பதை அறிந்தேன். என் கதையை பயன்படுத்தும்போது இயக்குனர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருக்கிறார். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் உரிய ஆவணங்களோடு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்க இருக்கிறேன் என்றார். மேலும் மூலக்கதை என்னுடையது என்பதை இயக்குனர் விருமாண்டி ஏற்றுக் கொண்டு திரையில் என் பெயரையும் சேர்க்க வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளேன் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் சேதுபதியின் தைரியம்! வாழ்வதும் போராட்டம், சாவதும் போராட்டம்!  க/பெ ரணசிங்கம் - விமர்சனம் 

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

gsgsdg

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணமடைந்தார். அவரது உடல் 72 மணி நேரத்தில் இந்தியா வந்து சேர்ந்தது. அதேபோல் பிழைப்புக்காக வெளிநாடு சென்ற சாமான்ய மனிதன் அங்கு இறந்துவிட்டால் அவர் உடலை சொந்த ஊர் கொண்டு வர எவ்வளவு நேரம் ஆகும்...?

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் நீரோட்டம் பார்த்துக்கொண்டே, சமூகம் சார்ந்து செயல்படும் விஜய் சேதுபதி, மக்களின் தண்ணீர் பிரச்சனைக்காகப் போராடுகிறார். அவரது நேர்மையான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷும் போராட்டக் களத்தில் குதிக்கிறார். இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு ஊருக்காக உழைத்தால் மட்டும் போதாது தன் குடும்பத்திற்காகவும் உழைக்க வேண்டும் என்று விஜய் சேதுபதிக்கு அறிவுரை சொல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரை வேலைக்காகாக துபாய்க்கு அனுப்பி வைக்கிறார். வேலைக்குச் சென்ற இடத்தில் நடந்த விபத்தில் விஜய் சேதுபதி இறந்துவிட்டார் என்ற தகவல் வருகிறது. அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர முடியாமல் தவிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதற்காக அவர் 10 மாதங்கள் வரை போராடுகிறார். இறுதியில் விஜய் சேதுபதியின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டதா இல்லையா என்பதே க்ளைமாக்ஸ்.

 

hshs

 

எப்போதும் போல் சார்மிங்கான நடிப்பால் ஈர்த்துள்ளார் விஜய் சேதுபதி. கதை முழுவதும் அவர் வந்தாலும் சில காட்சிகளே நடித்துவிட்டு சென்றிருக்கிறார். அதையும் நிறைவாகவே செய்துள்ளார். இப்படி, ஒரு நாயகனாக வெற்றிகரமாக இருக்கும்போதே கதையைக் கருத்தில் கொண்டு நடிப்பது  அவரின்  தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் காட்டுகிறது. அச்சு அசல் கணவரை இழந்த கிராமத்துப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். விஜய்சேதுபதி இப்படத்தின் நாயகனாக இருந்தாலும் படம் முழுவதும் ஒற்றைப் பெண் சிங்கமாக வலம் வந்து படத்தின் நாயகனாகவே மாறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த அளவிற்கு 'அரியநாச்சி' என்ற கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்துள்ளார். கதையிலும் சரி, அதில் தனக்குக் கிடைக்கும் கதாபாத்திரத்தையும் சரி, சிறப்பானதை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்ற கதாநாயகிகள் பட்டியலில் இணைந்து விட்டார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

 

இவர்களை தவிர படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள ரங்கராஜ் மாவட்ட கலெக்டராக வருகிறார். அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவே நடித்துள்ளார். காமெடி கலந்த குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ள முனீஸ்காந்த் மற்றும் நமோ நாராயணன் அவரவர் பங்கை சிறப்பாகச் செய்துள்ளனர். மற்றபடி நடிகர்கள் வேல ராமமூர்த்தி, பூ ராமு, டி சிவா, அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் தங்கையாக வரும் பவானி ஸ்ரீ கவனம் ஈர்த்துள்ளார். 

 

gdsags

 

 

Ad

 

வேலைக்காக வளைகுடா போன்ற வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், அங்கு இறந்துவிட்டால் அவர்கள் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதில் உள்ள சட்ட சிக்கல்களையும், உடலை கொண்டுவர பிடிக்கும் கால அவகாசத்தையும் மிகவும் ஆழமாக விவரிக்கிறது படம். அதை எளிமையான மனிதர்களின் வாழ்வியலோடு கலந்து சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் விருமாண்டி. ஒரு கணவனை இழந்த அபலை பெண்ணின் தனிமனித போராட்டத்தை அப்படியே உடனிருந்து பார்க்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். படத்தின் மிகப் பெரிய பலமாக சண்முகம் முத்துசாமியின் வசனங்கள் அமைந்துள்ளன. ஆனாலும் திரைக்கதையில் இன்னும் வேகம் இருந்திருக்கலாம். அதோடு எடிட்டர் சிவநாதீஸ்வரன் படத்தின் நீளத்தையும் சற்று கருத்தில் கொண்டு குறைத்திருக்கலாம். 

 

க/பெ ரணசிங்கம் - பரிதவிப்பு!


 

 

Next Story

''இந்தப் படம் இன்னொரு வலி. இது வெற்றிபெறக் கூடும்'' - வைரமுத்து ட்வீட்!

Published on 25/05/2020 | Edited on 25/05/2020

 

ghsh

 

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியக் கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்திலும் நடித்துள்ள படம் ‘க/பெ ரணசிங்கம்’.
 


இந்தப் படத்தை பெ.விருமாண்டி இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ரங்கராஜ் பாண்டே, இந்தப் படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘க/பெ ரணசிங்கம்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை பார்த்த கவிப்பேரரசு வைரமுத்து பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில்..

''நல்ல கலைகளெல்லாம் 
மனிதகுலத்தின் வலியிலிருந்து வழிந்தவை.
இந்தப் படம் இன்னொரு வலி.
இது வெற்றிபெறக் கூடும் என்று
என் நம்பிக்கை நரம்பு துடிக்கிறது.
பார்ப்போம்...''

எனப் பதிவிட்டுள்ளார்.