Skip to main content

கனல் கண்ணை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவு!

Published on 15/08/2022 | Edited on 15/08/2022

 

Judge orders Kanal Kanna to be jailed in court custody!

திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை வரும் ஆகஸ்ட் 26- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 

சென்னை மதுரவாயலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பங்கேற்றார். அப்போது, ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவர் அவதூறாகப் பேசினார். இதனால் கனல் கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. 
 

இதையடுத்து, கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரை, சைபர் கிரைம் காவல்துறையினர், தேடி வந்தனர். இந்த நிலையில், அவருக்கு முன்ஜாமீன் கிடைக்காத நிலையில், தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் புதுச்சேரியில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

 

அதைத் தொடர்ந்து, அவரை சென்னை அழைத்து வந்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி லட்சுமி முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, கனல் கண்ணனை வரும் ஆகஸ்ட் 26- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

கனல் கண்ணனால் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு; வாக்குவாதத்தில் இந்து முன்னணி

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Kanal Kannan in nagarkovil S.P. office;

 

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி அமைப்பில் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிநாட்டு கிறிஸ்தவ மதபோதகர் குறித்து அவதூறு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதனுடன் சில கருத்துகளையும் பதிவிட்டிருந்தார்.

 

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஜோசப் பெனடிக் என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மனுவில், கனல் கண்ணன் கிறிஸ்துவ மதத்தை அவமதித்தாகக் கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்நிலையில் இன்று காலை நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்திற்கு கனல் கண்ணன் விசாரணைக்காக வந்திருந்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 1 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கனல் கண்ணன் எஸ்.பி அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல முயன்றார். அவரைத் தடுத்த காவல்துறையினர், விசாரணை முடியும் வரை எங்கும் செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

 

அப்போது, எஸ்.பி அலுவலகத்தின் வெளியே இருந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கனல் கண்ணன் தனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், விசாரணை முடியும் முன் வெளியே செல்ல அனுமதி கிடையாது என கண்டிப்பு காட்டிய காவல்துறை, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. 

 

 

Next Story

“இது எங்க ப்ளான்; உங்களையே சொல்ல வச்சோமா...” - ரகசியத்தை வெளிப்படுத்திய கனல் கண்ணன் 

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

Kanal Kannan's opinion on the Tamil Nadu issue

 

கடந்த சில நாட்கள் முன்பு சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, தமிழ்நாடு எனச் சொல்வதைவிடத் தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் எனப் பேசியிருந்தார். இந்தக் கருத்து தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

ஆளுநரின் இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் பதிவு செய்தனர். ட்விட்டரில் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் ட்ரண்டிங்கில் இருந்தது. தமிழகமா? தமிழ்நாடா? என்ற கேள்வியை செய்தியாளர்கள் பல சினிமா பிரபலங்களிடமும் கேட்டனர். ஏறத்தாழ அனைவரும் தமிழ்நாடு என்றே தெரிவித்தனர்.

 

இந்நிலையில் சென்னை மணலியில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இது தமிழ்நாடு மட்டுமல்ல இந்து நாடு. இது திராவிட மண் அல்ல. தமிழக போலீஸ், தமிழக முதலைச்சர் என்று இதற்கு முன்பு சொன்னதில்லையா. ஒரத்த நாடு, வல்ல நாடு என்பது போன்ற ஊர்கள் எல்லாம் இருக்கின்றது. அது தனி நாடு ஆகிவிடுமா. 

 

நாங்கள் தமிழ்நாடு என்று சொன்னால் நீங்கள் திராவிட நாடு எனச் சொல்லுவீர்கள். நாங்கள் தமிழகம் எனச் சொன்னால் நீங்கள் தமிழ்நாடு எனச் சொல்லிவிட்டீர்கள் அல்லவா. இதுதான் எங்கள் ப்ளான்” எனக் கூறினார்.