joined DMK in the presence of Minister I. Periyasamy

திண்டுக்கல் ஒன்றியம், அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாப்பனம்பட்டி, அச்சாம்பட்டியைச் சேர்ந்த அதிமுகவினர் 200 பேர் அக்கட்சியிலிருந்து விலகி அகரம் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும்ஒன்றியசெயலாளர்தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Advertisment

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ''தமிழக முதல்வரின் சிறப்புமிகு திட்டங்களால் இளைஞர் மத்தியில் நல்ல எழுச்சி வந்துள்ளது. குறிப்பாக அனைத்துத்துறைகளும் சிறப்பாகச் செயல்படுவதாலும், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை, விவசாயிகள், கால்நடை விவசாயிகள், கிராம மக்கள் நலன் காக்கும் துறையாக இருப்பதால் அதிக அளவில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்து வருகின்றனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்களுக்குக் கழகத்தொண்டர்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். 6 மாதங்களுக்கு முன்பே இணைந்திருக்க வேண்டியவர்கள் சற்று தாமதமாக திமுகவில் இணைந்துள்ளார்கள். இருந்தாலும் அவர்கள் திமுகவில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறினார்.

Advertisment