Skip to main content

ஜெயிலர் வெற்றிக்கொண்டாட்டம்; வேலூரில் ரசிகர்கள் உற்சாகம் 

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

Jailer wins; Fans are excited in Vellore

 

ஒரு காலத்தில் ஒரு திரைப்படம் 50 நாள், 100 நாள் ஓடினால் அதற்கு வெற்றிவிழா கொண்டாடுவார்கள். இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் ஒருவாரம் தியேட்டரில் ஓடினால் அதுவே சாதனையாகத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், அவர்களது ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள். டி.வி, இணையதளம், மொபைல் போன்றவற்றின் வளர்ச்சியால் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் பார்வையாளர்கள் வெகுவாக குறைந்துவிட்டனர். இதனால் எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் முதல் இரண்டு வாரம் ஹவுஸ்புல்லாக படம் ஓடினாலே வெற்றி படம் என முத்திரை குத்தும் நிலையே இன்றைய திரையுலகில் நிலவுகிறது. 

 

கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டது. முதல் வாரம் மட்டும் சுமார் 350 கோடி ரூபாய் வசூலித்துள்ளது எனச் சொல்லப்படுகிறது. இதனை வைத்து ரஜினி ரசிகர்கள் பல்வேறு வகையில் ரஜினியை ட்விட்டரில் டிரெண்ட் செய்துவருகின்றனர். அதேபோல், சமீபத்தில் ஏற்பட்ட சூப்பர் ஸ்டார் குறித்தான பேச்சுக்களுக்கெல்லாம் ஜெயிலர் படம் மூலம் ரஜினி தான் என்றும் சூப்பர் ஸ்டார் என்பதையும் நிரூபித்துள்ளார். 

 

Jailer wins; Fans are excited in Vellore

 

இந்நிலையில் வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரிலுள்ள விஷ்ணு திரையரங்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படம் கடந்த ஒருவாரமாக அரங்கம் நிறைந்த காட்சிகளாக இருப்பதால் படத்தின் வெற்றியை கொண்டாட ரஜினி ரசிகர்கள் திரையரங்கத்துக்கு மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்தபடி வந்துள்ளனர். அங்கு திரைப்படம் வெற்றிக்கு அடையாளமாக கேக் வெட்டி கற்பூரம் ஏந்தி பூசணிக்காய் உடைத்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  

 

Jailer wins; Fans are excited in Vellore

 

ஒருங்கிணைந்த ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் திரண்டிருந்த ரசிகர்கள், ஜெயிலர் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரைப்படம் வெளியாகும் முன்பு இந்தப்படம் வெற்றியடைய வேண்டுமென கோவில்களில் சிறப்பு பூஜை, மண் சோறு சாப்பிடுதல் என விதவிதமான வேண்டுதல்களில் ஈடுபட்டனர் ரஜினி ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சேறும், சகதியுமான சாலை; சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராட்டம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

People struggle to repair the mud and muddy road

 

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டு சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர், கே.கே. நகர், பனந்தோப்பு ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மாநகரில் உள்ள இந்த குடியிருப்புப் பகுதியில் தெரு விளக்கு, சாலை வசதி, மழைநீா் வடிகால் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், இதுதொடா்பாக பலமுறை வார்டு கவுன்சிலர்களுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையருக்கும் இப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் குடியிருப்புக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் சேறும் சகதியுமாகவும், குண்டும் குழியுமாகவும் மாறி ஆங்காங்கே குளம் போல் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதும், நடந்து செல்லும் பலரும் சாலையில் வழுக்கி விழுந்து காயமடைவதும் எனத் தொடர்கதையாக ஆகிறது.

 

இதனால், ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள், ஆண்கள் என 30க்கும் மேற்பட்டவர்கள் முக்கிய சாலையில் சேறும் சகதியுமான இடத்தில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விரைந்து சாலை அமைத்துத் தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரி விபத்து 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Sand truck accident on National Highway

 

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் இருந்து சென்னைக்கு மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே உள்ள சென்டர் மீடியம் கம்பியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் லாரியில் இருந்த மணல், சாலையின் இடையே சிதறியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார் மற்றும் மணல் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்கள் மணலை ஜேசிபி மூலம் அள்ளி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

 

இந்த விபத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாகக் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்