/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG_20180508_103543.jpg)
பழைய ஒய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ச்சியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுவர்களை தொடர்ந்து போலீசார் கைது செய்து வருகின்றனர். ஏனினும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குழு குழுவாக வந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாலஜா சாலை பகுதியில் போக்குவரத்து சேவை முழுவதும் மாற்றப்பட்டுள்ளது. ஏனினும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)