Skip to main content

“தமிழ்நாட்டில் இப்படி நடப்பது துரதிருஷ்டவசமானது” - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

 "It is unfortunate that this is happening in Tamil Nadu" - Minister Thangam Tennarasu interview

 

தமிழ்நாட்டிலேயே மிக அதிக வயதில் ஓய்வூதியம் பெறும் முதியவர் கோபாலகிருஷ்ணனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சந்தித்தார்.

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான வயதில், 107 வயதில் ஓய்வூதியம் பெறக்கூடிய பெரியவர் ஐயா கோபாலகிருஷ்ணனை நாங்கள் இன்று சந்தித்தோம். நானும் நம்முடைய ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சந்தித்தோம். தமிழ்நாட்டில் நூறு வயதிற்கும் மேற்பட்ட 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய கருவூலத்துறையின் அதிகாரிகள் நேரடியாகச் சென்று அவர்களிடத்தில் ஓய்வூதிய தகுதி நீட்டிப்பு சான்றிதழ் வழங்குவார்கள்.

 

பெரியவர் கோபாலகிருஷ்ணன் 1916 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். முதல் கட்டமாக இந்திய ராணுவத்தில் மெக்கானிக்காகப் பணியாற்றி பிறகு சுங்கத் துறையில் பணியாற்றி பிறகு காவல்துறையிலும் அவர் பணியாற்றி இருக்கிறார். 72 ஆம் ஆண்டிலிருந்து அரசினுடைய ஓய்வூதியத்தைப் பெற்றிருக்கிறார். 107 வயதில் இருக்கக்கூடிய பெரியவரான அவரை நாங்கள் இன்றைக்கு நேரில் சந்தித்து சான்றிதழை வழங்கி பெருமையடைந்திருக்கிறோம். முதலமைச்சர் தன்னுடைய அன்பான வாழ்த்துக்களையும் அவருக்கு நேரடியாகத் தெரிவித்து இருக்கிறார்'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர்கள், 'தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு வாய்ப்பு இருக்கிறதா' என்ற கேள்விக்கு, “அது அரசு  பரிசீலனையில் இருக்கிறது'' என்றார்.

 

திருவாரூரில் கேந்திரிய பள்ளியில் தமிழ் மொழி அழிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ''எங்கே இருந்தாலும் தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது. இதுபோன்று சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் தமிழ்நாட்டில் ஏற்படுவது துரதிருஷ்டவசமானது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘மக்களைக் குழப்பும் புதிய கிரிமினல் சட்டங்கள்’ - உயர்நீதிமன்றம் கருத்து!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
New laws that confuse people High Court opinion

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதே சமயம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும் மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

New laws that confuse people High Court opinion

இதனையடுத்து புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.  இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (19.07.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “அமலுக்கு வந்துள்ள புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. இந்த மூன்று சட்டங்களையும் அமல்படுத்தும் முன் சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். அதன் பின்னர் இது குறித்து மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story

புதிய குற்றவியல் சட்டங்கள்; உயர் நீதிமன்றத்தை நாடிய திமுக!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
New laws brought into force DMK appealed to the High Court

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதே சமயம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும் மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். 

New laws brought into force DMK appealed to the High Court

இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (19.07.2024) விசாரணைக்கு வர உள்ளது. 

The website encountered an unexpected error. Please try again later.