Skip to main content

''வழக்கு தொடர்வது அவர்களின் உரிமை''-போட்டித்தேர்வில் தமிழ் தாள் கட்டாயம் குறித்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

 '' It is their right to sue '' - Minister PDR Palanivel Thiagarajan's explanation on the compulsory Tamil paper in the competitive examination!

 

அரசு வேலைக்கு நடத்தப்படும் தேர்வுகளான டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுகளில் தமிழ்மொழி தாளை கட்டாயமாக்கி தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப்-1, குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-3, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் தாள்களில் ஆங்கிலம் நீக்கப்பட்டு தமிழ்மொழி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தமிழ்மொழி தாள் பாடத்திட்டம் 10 ஆம் வகுப்பு தரத்தில் அமையும் என்றும், அதில் குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் என்றும் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி தாளில் தேர்ச்சி பெறாவிட்டால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது என்ற வழிகாட்டுதலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 '' It is their right to sue '' - Minister PDR Palanivel Thiagarajan's explanation on the compulsory Tamil paper in the competitive examination!

 

ஆங்கில வழியில் பயின்றவர்கள் அரசின் இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அரசின் இந்த அரசாணை குறித்து தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  ''அனைவருக்கு சமமான வாய்ப்பு கிடைக்கும் நிலை இதனால் உருவாகும். முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு தமிழ் ஃபில்டர் கிடையாது. 10 ஆம் வகுப்பு அளவிற்கு 40 சதவிகிதம் பாஸ் மார்க் இருந்தால் போதும். ஆங்கில வழியில் பயின்றவர்கள்  இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது அவர்களது தனிப்பட்ட உரிமை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.