IT Raid at Trichy Government Contractor's House!

திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி. இவரது வீட்டில், நேற்று இரவு(05-04-24) வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்புடன் ஏழுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசு பணிகளை இவர் தான் மற்ற ஒப்பந்ததாரருக்கு எடுத்து பிரித்து கொடுப்பார் என தகவல் தெரிவித்துள்ளனர். பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தேதி நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்காக பணம் பட்டுவாடா தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், நேற்று காலை முதலே வருமானவரித்துறை அதிகாரிகள் திருச்சியில் இருப்பதாக தகவல் வெளியானது. அந்த வகையில், நேற்று இரவு 7 மணி முதல்ஈஸ்வரமூர்த்தி வீட்டின்உள்ளே நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் பணம் பட்டுவாடா தொடர்பாக பணம் இவரது வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.