Skip to main content

“தொழில் நுட்பத்துறைக்கு இருக்கும் வரவேற்பு அறிவியல் துறைக்கு இல்லாதது கவலை..” - பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

It is a matter of concern that the science department does not have the same welcome as the technology department

 

அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில், தேசிய அறிவியல் தின நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி பேசுகையில், அறிவியல் கண்டுபிடிப்புகள் மிக முக்கியமானது என்றும் உலகை ஆளும் சக்தி மிக்கது என்றும் குறிப்பிட்டார். சர்.சி.வி.ராமனுக்குப் பிறகு இந்தியாவிற்கு அறிவியல் துறையில் நோபல் பரிசு கிடைக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார். தற்போதைய காலகட்டத்தில் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு உலக அளவில் இந்தியாவின் பெயரை ஒளிரச்செய்ய வேண்டுகோள் விடுத்தார்.

 

சமீப காலமாக உலக அளவில் தொழில் நுட்பத்துறைக்கு இருக்கும் வரவேற்பு அறிவியல் துறைக்கு இல்லாதது குறித்த கவலையை வெளிப்படுத்தினார். தற்போது, உலகம் முழுதும் பயன்படுத்தும் செல்ஃபோன் வளர்ச்சியையும் அதன் கண்டுபிடிப்பின் மூலம் பல்வேறு கருவிகளின் வேலையை ஒரே ஒரு செல்ஃபோன் மூலமே செய்து கொள்ளும் வசதியை நாம் பெற்றுள்ளதை அறிவியல் வளர்ச்சி எனக் குறிப்பிட்டார்.

 

It is a matter of concern that the science department does not have the same welcome as the technology department

 

பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் ஞானதேவன் அனைவரையும் வரவேற்றார். பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் சீனிவாசன், வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் விவசாயத்துறை தலைவர் கதிரேசன் உள்ளிட்ட பேராசிரியர்கள் 6 பேருக்கு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியீட்டிற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், 19 பேராசியர்களுக்குப் பல்வேறு பிரிவுகளில் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

 

கடல்வாழ் உயிரின உயராய்வு மைய்யத்தில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கிப் பாராட்டப்பட்டது. அறிவியல் புல முதல்வர் நிர்மலா ரட்சகர் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு புல முதல்வர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, மேடையில் அறிவியல் மேதை சர்.சி.வி. ராமன் படத்திற்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.