publive-image

கூட்டுறவுத் துறையில் பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகள் மூன்று பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையைக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவுக் கல்லூரி யில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் காந்திநாதன் தலைமை தாங்கினார். கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் செல்வக்குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை சேவுகம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் பணிபுரிந்த முருகனின் உறவினர் வசந்திக்கு, கூட்டுறவு வேளாண்மை சங்கத்தில் ஏவலர் பணியும், வத்தலக்குண்டு பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் கூட்டுறவு சிக்கன நாணயத்தில் பணிபுரிந்த சீனிவாசன் என்பவரின் மகன் விக்னேஷ்வரனுக்கு, டிடி523 மேட்டுப்பட்டி கூட்டுறவு நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் சிற்றெழுத்தர் பணியும், கிழக்கு செட்டியபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணியின்போது உயிரிழந்த விசுவநாதன் உறவினர் கிஷோர் மங்களத்திற்கு கிழக்கு செட்டியப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் விற்பனையாளர் பணிக்கான ஆணையையும் அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.

Advertisment

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் போது தான் கூட்டுறவுத் துறையில் பணியின் போது, இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சி காலத்தில் வருட கணக்கில் காத்திருந்தவர்களுக்கு கூட தி.மு.க. ஆட்சியில் உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படுகிறது" என்று கூறினார்.