Skip to main content

இஸ்ரோவின் 50-வது பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

இஸ்ரோ மூலம் அனுப்பப்படும் 50-வது பிஎஸ்எல்வி ராக்கெட் என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த பி.எஸ்.எல்.வி., சி-48 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

 

isro-to-launch-plsv-c48

 

இந்த ராக்கெட் மூலம் அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள்கள், இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோளும் வணிக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் ரீசாட் -2 பிஆர்1 செயற்கைக்கோள் ஐந்து ஆண்டுகள் பூமியை கண்காணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

சார்ந்த செய்திகள்