Isolated film director Bharathiraja!

சென்னையிலிருந்து திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவரது சொந்த ஊரான தேனிக்கு சென்றார். அப்போது தேனி மாவட்ட எல்லையான தேவதானப்பட்டியில் அவர் நுழைந்தபோது அவரை சுகாதாரத்துறைஅதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அந்த சோதனையில் அவருக்கு கரோனா தொற்றுஇல்லை என்பது உறுதியானது. ஆனால் சிவப்பு நிற மண்டலமாக சென்னை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அங்கிருந்து திரும்பியதால் இந்த சோதனை நடத்தப்பட்டது. இருந்தாலும் வெளியூரில் இருந்து வந்தவர் என்பதால் அவரை 15 நாள் அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தினர்.

Advertisment

Advertisment

அதனை ஏற்று அவர் தேனியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் வீடு என்ற அறிவிப்பு நோட்டீஸும்ஒட்டப்பட்டுள்ளது.