/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_205.jpg)
திண்டுக்கல் மாநகரில் உள்ள கலைஞர் மாளிகையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாநகர மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சமூக வலைதளம் (மகளிர்) பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, துணை செயலாளர் நாகராஜன், பிலால் உசேன், மார்கிரேட்மேரி,மாவட்ட திமுக பொருளாளர் சத்தியமூர்த்தி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன், மாநகர செயலாளர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பார்வையாளராகச் சென்னை சேர்ந்த திமுக மாநில மகளிர் அணி நிர்வாகி தேன்மொழி கலந்து கொண்டார்.
இதில் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் கலந்து கொண்டு பேசும்போது, “நான் கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். எடுத்தவுடன் எனக்கு இந்த பதவி கிடைக்கவில்லை. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக 12 வருடங்கள் பதவி வகித்த பின்பு மாநில இளைஞரணி பொறுப்பு ஏற்று அதன் பின்பு மாவட்டச் செயலாளராக இன்று பதவியில் உள்ளேன். அதற்கு காரணம் எனக்கு முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞர் தொடங்கி தலைவர் மு. க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆதரவு தான்.
இளைஞர் அணி நிர்வாகிகளை நியமிக்க இரு சக்கர வாகனத்தில் 40 முதல் 50 தூரம் கிலோமீட்டர் வரை சென்று நாங்கள் இளைஞர்களை நியமனம் செய்தது இன்று அவர்கள் மரம் போல் தழைத்து திமுக என்ற பேரியக்கத்திற்கு உறுதுணையாக உள்ளார்கள். அதுபோல இன்று நாம் நியமனம் செய்யும் மகளிர் அணியினர் என்றும் உறுதுணையாக இருப்பார்கள். மகளிர் அணியினரும் கட்சியில் பங்கேற்க வேண்டும் என நல்ல நோக்கத்தோடு தலைவர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி மதிப்பிற்குரிய மகளிர் அணித் தலைவி கனிமொழி அக்கா அவர்களின் ஆலோசனைப்படி இன்று நகரங்கள் மற்றும் கிராமப்புற ஊராட்சிகளுக்கு மகளிர் அணி நியமிக்க உள்ளோம். இன்று அதற்கான பணிகளை நாம் தொடங்க வேண்டும். மகளிர்களுக்கு பொறுப்புகள் கொடுத்தால் தான் அவர்களிடமிருந்து வேலை வாங்க முடியும். அவருக்கு கீழே உள்ளவர்களிடமிருந்து அவர்களும் வேலை வாங்க முடியும் என்றதோடு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மகளிர் அணிகளின் பங்கு பெரும் பங்காக இருக்கும் என்பதை இப்போது நான் உறுதியாகச் சொல்கிறேன்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)