Intoxicated attack on school van - Police investigation

ராமநாதபுரத்தில் தனியார் பள்ளி வாகனத்தை மறித்து சில நபர்கள் போதையில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisment

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நென்மேனி கிராமத்தில் தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டுசென்ற நிலையில், அந்தப் பகுதியில் மதுபோதையில் இருந்தஇளைஞர்கள் சிலர் பள்ளி வேனை நிறுத்தியதோடு அதன் ஓட்டுநரைக் கீழே இறங்கச் சொல்லி அவரை சரமாரியாகத்தாக்கினர். மேலும் பேருந்து மீது கற்களை எடுத்து வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

வேனில் இருந்த பள்ளி மாணவர்கள் அச்சமடைந்த நிலையில், மது போதையில் தகராறு செய்த இளைஞர்களை அப்பகுதி மக்கள் விரட்டி அடித்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment