Skip to main content

நக்கீரன் நினைவில் மயில்சாமி: “இறைவன் இருந்தால் என்ன? இல்லையென்றால் என்ன? அது என் மனசாட்சி” - நக்கீரனுக்காக அளித்த பேட்டி

Published on 19/02/2023 | Edited on 19/02/2023

 

Interview given by Mailsamy for Nakkheeran

 

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

நக்கீரன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த மயில்சாமி நக்கீரன் யூடியூப் சேனலுக்காக பேட்டி கொடுத்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன் கொரோனா அச்சங்கள் இருந்த காலத்தில் நாம் அவரை சந்தித்த பொழுது மிக உற்சாகமாகவே பேசினார். 

 

அதில், “கொரோனா உலகத்தை ஆட்டிப்படைக்கிறது. இம்மாதிரியான பேட்டிகள் எடுப்பதே பெரிய விஷயம். நான் வீட்டை விட்டு வெளியில் வந்தே வெகுநாட்கள் ஆகிவிட்டது. சிவசங்கர் பாபா செய்தி வெளியானதும் மயில்சாமி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாரே அந்த நபர் தான் என மீண்டும் அதைப் பற்றி பேசுகிறார்கள். சாதனை செய்தவர்கள் மீண்டும் வேறு சாதனைகளை செய்து பழையதை உடைப்பார்களே. அது மாதிரிதான் இதுவும். 

 

நான் பேசும் விஷயங்கள் பெரும்பாலும் மக்கள் சார்ந்துதான் இருக்கும். இன்னொரு தனிப்பட்ட நபரின் விஷயங்களைக் குறித்து நான் பேச மாட்டேன். அது நமக்கு தேவை இல்லாத விஷயம். அனைத்திற்கும் இருபக்கங்கள் உண்டு. அதேபோல் தான் சாமியார்களும். நல்லவர்கள், கெட்டவர்கள் உள்ளார்கள். சில சாமியார்களை எனக்கு தெரியும். ஆனால், அவர்கள் அடுத்தவேளை உணவை எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். மாற்றுத்துணி இருக்காது. அவர்கள்தான் சாமியார். 

 

ஆசைப்படாமல் இருப்பவர் மட்டுமே சாமியார். ஆடம்பரமாக இருப்பவர்கள் நகைகளைப் போட்டு இருப்பவர்கள், ஆசிரமங்கள் என்னும் பெயரில் கேட்டை அடைத்து உள்ளே பெண்களை வைத்து தவறு செய்பவர்கள் சாமியார்கள் இல்லை. அவர்கள் மேலும் மேலும் முன்னேறுவது இந்த ஜனங்களின் காரணத்தால் தான். அவர்கள் ஏன் செல்கிறார்கள். 

 

திருவண்ணாமலை போகிறீர்கள். நீங்கள் எப்படி என, என்னை சிலர் கேட்கிறார்கள். நான் சாமியார் அல்ல. நான் இறைவனை கும்பிடுகிறவன். இறைவன் இருந்தால் என்ன? இல்லையென்றால் என்ன? என் மனசாட்சி. அதை நான் சொல்கிறேன்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“விவேக், மனோபாலா, மயில்சாமி மூவருடனான நட்பு”  - அனுபவம் பகிரும் எம்.எஸ். பாஸ்கர்

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

M. S. Bhaskar Interview  -  Vivek - Manobala - Mayilsamy

 

தன்னுடைய திரையுலக மற்றும் வாழ்வியல் அனுபவங்கள் பலவற்றையும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

நடிகர் விவேக் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர். என்னுடைய தம்பியும் அங்கு தான் வேலை செய்துகொண்டிருந்தார். கவிதாலயாவின் படங்களில் விவேக் நடித்தபோது நான் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்தேன். அப்போதே அவர் எனக்குப் பழக்கம். நான் வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது வாய்ஸ் எஃபெக்ட்டுகள் கொடுப்பவராக இருந்தவர் மயில்சாமி. மனோபாலாவும் எனக்கு நீண்ட கால பழக்கம். மயில்சாமி எனக்கு மிக நெருங்கிய நண்பன். மனோபாலாவை நான் அண்ணன் என்று தான் அழைப்பேன். 

 

என் மீது மனோபாலா மிகுந்த அன்போடு இருப்பார். மயில்சாமியை அடிக்கடி நான் சந்திப்பேன். சிவராத்திரி நிகழ்ச்சிக்கு வருகிறாயா என்று மயில்சாமி என்னை போனில் அழைத்தான். அன்று எனக்கு ஷூட்டிங் இருந்ததால் செல்ல முடியவில்லை. திடீரென்று அவன் இறந்துவிட்டான் என்கிற செய்தி வந்தது. என்னால் நம்ப முடியவில்லை. விவேக்கின் மரணமும் அப்படியானது தான். மனோபாலா அண்ணன் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனாலும் அவர் இறந்துபோவார் என்று நினைக்கவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பன் தினகரனும் சமீபத்தில் இறந்தான். 

 

என்னுடைய நண்பர்கள் பற்றியோ, நான் செய்யும் தானங்கள் பற்றியோ எதுவுமே தெரியாதவர்கள் என்னைப் பற்றி செய்யும் விமர்சனங்கள் அவர்களுடைய அறியாமையைத் தான் காட்டுகிறது. நான் பணம் கொடுக்கமாட்டேன் என்பது உண்மைதான். ஒருமுறை சுகர் மாத்திரை வாங்கப் பணம் வேண்டும் என்று உணவகத்தில் ஒருவர் கேட்டார். நான் நூறு ரூபாய் கொடுத்தேன். அதை எடுத்துக்கொண்டு நேராக அவர் டாஸ்மாக் சென்றார். அதிலிருந்து நான் பணமாக யாரிடமும் கொடுப்பதில்லை. மாத்திரை வேண்டுமென்றால் மருந்தகத்துக்கு அழைத்துச் சென்று நானே வாங்கித் தருவேன்.

 

சம்பாதிக்கும் அனைத்தையும் வாரிக் கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு இயக்குநரின் இரண்டு படங்களில் அருமையான காட்சிகள் செய்திருந்தேன். அந்த இரண்டு காட்சிகளையும் அவர் வெட்டிவிட்டார். அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. தெரிந்த ஒருவரிடம் நம்பி 5 லட்ச ரூபாயை அவருடைய வியாபாரத்துக்காக கொடுத்தேன். இன்று வரை அவர் திருப்பித் தரவில்லை. தரக்கூடிய நிலையில் அவர் இல்லை. கேட்டுக் கேட்டுப் பார்த்து விட்டுவிட்டேன். இனி உஷாராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வாழ்க்கையில் எது கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்கிற மனநிலைக்கு நாம் வந்துவிட வேண்டும்.

 


 

Next Story

காட்டூரில் இன்னோவேஷன் அண்ட் லேர்னிங் சென்டர் திறப்பு

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

Inauguration of Innovation and Learning Center at Kattur


திருச்சிராப்பள்ளி காட்டூரில் இன்னோவேஷன் அண்ட் லேர்னிங் சென்டர் திறக்கப்பட்டுள்ளது. AIF-இன் விருது பெற்ற முதன்மைக் கல்வித் திட்டமான டிஜிட்டல் ஈக்வலைசரால் வழி நடத்தப்படும் இந்த மையம், இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு அனுபவத்தின் மூலம் STEM-ஐ ஆராய்ந்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும். மேலும் DSLV மிஷன் மாணவர்களை செயற்கைக் கோள்கள், ட்ரோன்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் பற்றி அறிய ஊக்குவிப்பதோடு இத்தொழில்நுட்பங்களில் உயர்கல்விக்கான விருப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் தொடங்கப்பட்டுள்ளது.

 

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, 8 ஆகஸ்ட் 2023: அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை (AIF), தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை இந்தியாவின் மூன் மேன் என அழைக்கப்படும் முன்னாள் இயக்குநர் இஸ்ரோ, துணைத் தலைவர் - மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் ஆகியோரின் முன்னிலையில், தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி காட்டூரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (ADW) STEM இன்னோவேஷன் அண்ட் லேர்னிங் சென்டரை (SILC) திறந்து வைத்தார்.

 

இந்த மையம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் STEM தொடர்பான தேடல்களுக்கான 'ஒன் ஸ்டாப் சொலுஷன்' ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான இன்னோவேஷன் கார்னரைக் கொண்டுள்ள இந்த மையம், அவர்களுக்கு ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI), விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் STEM இன்குபேஷன் பணி நிலையம் போன்றவற்றின் மூலம் இடைநிலைக் கற்றல் அணுகுமுறையை அறிமுகப்படுத்தும். மேலும் மாணவர்களின் கல்வி மேம்பட்ட STEM படிப்புகளில் அவர்களின் ஆர்வத்தை வளர்ப்பதோடு மட்டுமன்றி அவர்களின் புதுமையான யோசனைகளை மாதிரி வடிவமாக மேம்படுத்தி மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான ஒரு சிறந்த அடித் தளத்தை உருவாக்குகிறது.

 

இந்த மையம் ஆசிரியர்களுக்கான டெக்னாலஜி கார்னரையும் கொண்டிருக்கும். ஒரு ஸ்மார்ட் ஆய்வகத்துடன் பொருத்தப்பட்ட டெக் கார்னர், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தின் மூலம் வகுப்புகளை நடத்துவதற்கு வசதியாகவும், மேலும் AIF-ஆல் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் ஈக்வலைசர் வழி கற்பித்தல் (DEWO2T) பயிற்சியை அனைத்து வகையான கற்பவர்களுக்குமான ஒரு தனித்துவம் பெற்ற கற்பித்தல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மற்றொரு பிரிவான ஸ்டுடியோ அமைப்பு ஆசிரியர்களுக்கு உயர்தர DE EDU ரீல்களை உருவாக்க உதவுகிறது. DE EDU ரீல்ஸ் என்பது பாடத்தின் முக்கியமான வரையறைகள், கோட்பாடுகள், அடிப்படைக் கருத்துக்கள் போன்றவற்றை 60 வினாடிகளுக்குள் மாணவர்களுக்கு புரியுமாறு எளிதாக விளக்கும் ஒரு புதுமையான முயற்சியாகும். இது நீட், என்எம்எம்எஸ் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் பயன்படுமாறு உருவாக்கப்படுகிறது.

 

STEM இன்னோவேஷன் அண்ட் லேர்னிங் சென்டரின் (SILC), பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் முதன்முறையாக திருச்சியில் விண்வெளி தொழில்நுட்பம் குறித்த ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) உள்ளடக்கத்தை AIF அறிமுகப்படுத்துகிறது, அங்கு மாணவர்கள் டேப்லெட்டுகளைப் பயன்படுத்தி செயற்கைக் கோள்கள், ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகள் பற்றி அறிந்து கொள்வார்கள். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் AIF-ஆல் வடிவமைக்கப்பட்ட STEM powering என்ற புத்தகம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது மாணவர்களுக்கு எளிமையாகவும் அவர்களை ஈர்க்கக் கூடியதாகவும் விளக்குவதன் மூலம் கற்றலை எளிதாக்குகிறது. மேலும் மாணவர்கள் தாங்களாகவே செயல்பாடுகளை செய்வதன் மூலம் கருத்தை நன்கு புரிந்துகொள்ள உதவும். இந்த புத்தகம் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் NMMS-இன் முந்தைய ஆண்டுகளின் கேள்விகளை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டு கேள்விகளைக் கொண்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் மாணவர்களின் கண்ணோட்டத்தை மாற்றும் கற்றல் துணையாக இருக்கும்

 

மேலும் AlF 98 பள்ளிகளுக்கு 146 AV Room Setup மற்றும் 113 பள்ளிகளுக்கு அறிவியல் மற்றும் கணித கற்றல், கற்பித்தல் கருவிகள் வழங்குகிறது. இதனைத் திறப்பு விழாவின் போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர்,கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய 5 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கினார். விழாவில் கலந்துகொண்டு பேசிய AIF-இன் இன்னோவேஷன் அண்ட் டெக்னாலஜி மற்றும் தெற்கு பிராந்திய மேலாளர் தி. பாஸ்கரன், ''இந்த STEM இன்னோவேஷன் அண்ட் லேர்னிங் சென்டர், இப்பள்ளி மட்டுமின்றி அதைச் சுற்றி உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் STEM-ஐ அனுபவத்தின் மூலம் ஆராய்ந்து அறிந்து கொள்வதற்கும், அப்பள்ளிகளின் ஆசிரியர்கள் டிஜிட்டல் ஈக்வலைசர் வழி கற்பித்தல் பயிற்சி பெறுவதற்கும், DE EDU ரீல்களை உருவாக்குவதற்கும் ஒரு ஒன் ஸ்டாப் மையமாக செயல்படும்' என்றும் கூறினார்.

 

Inauguration of Innovation and Learning Center at Kattur

 

பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களால் வழிகாட்டப்படும் இந்த மையம், டிஜிட்டல் ஈக்வலைசரின் TLM மூலம் மாணவர்கள் விண்வெளி தொழில்நுட்பத்தைப் பற்றி அறிய ஒரு தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மையம் 250 பள்ளிகளில் 4,000 ஆசிரியர்கள் மற்றும் 60,000 மாணவர்களை கேஸ்கேடிங் பயிற்சி மாதிரியின் மூலம் கற்றுக்கொள்ள உதவுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் Drone மற்றும் PICO செயற்கைக் கோள்கள் மற்றும் கிளைடர்கள், ஹைட்ரோ பிளாஸ்ட்கள் மற்றும் மினி ராக்கெட்டுகளை தயாரிப்பதில் பயிற்சி பெற்றனர். இந்த மாணவர்கள் SILC திறப்பு விழாவில் தங்கள் மாதிரிகளை விளக்கி, சிறப்பு விருந்தினர் முன்னிலையில் செயல் விளக்கமளிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ், முதன்மைக் கல்வி அதிகாரி சிவக்குமார் மற்றும் இன்னோவேஷன் அண்ட் டெக்னாலஜின் தலைவர் மற்றும் தெற்கு பிராந்திய மேலாளர் தி. பாஸ்கரன் போன்ற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திறப்பு விழாவும் அதைத் தொடர்ந்து வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

 

அமெரிக்கன் இந்தியா ஃபவுண்டேஷன் (AIF) இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஊக்குவித்து அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு நீடித்த பாலத்தை உருவாக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, இந்தியாவின் பின்தங்கியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிப்பூண்டுள்ளது. வறுமை பல பரிமாணங்களைக் கொண்டதாக இருப்பதால், கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களில் உயர் தாக்கத் தலையீடுகளின் மூலம் இதைச் செய்து வருகிறது. சமூகங்கள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான பரந்த ஈடுபாட்டின் மூலம் AIF அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு நீடித்த பாலத்தை உருவாக்குகிறது. AIF புதுமையான தீர்வுகளை உருவாக்க மற்றும் சோதிக்க அரசு சாரா நிறுவனங்களுடனும் நிலையான தாக்கத்தை உருவாக்க மற்றும் அளவிட அரசாங்கங்களுடனும் இணைந்து உள்ளூர் சமூகங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது. 2001-இல் நிறுவப்பட்ட AIF, இதுவரை 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 12.9 மில்லியன் இந்திய ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது . AIF பற்றி மேலும் அறிய www.aif.org

 

Digital Equalizer (DE) என்பது குறைவான சேவை பெறும் சமூகத்தைச் சேர்ந்த அனைத்துக் குழந்தைகளும், குறிப்பாகப் பெண் குழந்தைகள் தங்கள் தொழில் மற்றும் வாழ்க்கைக்குத் தயாராக இருக்கும் உலகத்தை உருவாக்க முயல்கிறது. இத்திட்டம் செயல்திறன் மற்றும் வளம் குறைந்த பொதுப் பள்ளிகளுக்கு தொழில்நுட்பத்தை வழங்குதல் மற்றும் தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைத்தல், ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் மூலமும், STEM முறைகளிலும் கற்பிக்க பயிற்சி அளித்தல் மற்றும் வகுப்பறைகளைக் கூட்டு மற்றும் ஊடாடும் இடங்களாக மாற்றுதலின் வாயிலாக இந்தியாவின் டிஜிட்டல் பிளவைக் குறைத்து மாணவர்களை 21 ஆம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தில் வெற்றிபெற தயார்படுத்துகிறது. 2004-இல் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த திட்டம் 5.4 மில்லியன் குழந்தைகளுக்கு ஊடாடும் STEM அனுபவங்களையும், 182,025 ஆசிரியர்களுக்கு STEM கற்பித்தல் பயிற்சியையும் அளித்து நாட்டின் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 24,471 பள்ளிகளை மாற்றியுள்ளது.